பக்கம்:மாயக் கள்ளன்.pdf/78

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

75 இந்தக் காட்சியை ஊரார் எல்லோரும் வந்து பார்த்தார்கள். பார்த்தவர்கள் எல்லோரும் விழுந்து விழுந்து சிரித்தார்கள். அட பயித்தியமே, இதுவா தங்கக்கட்டி ? என்று கேலி செய்தார்கள். எல்லோரும் இவ்வாறு கேலி செய்யவே தங்கமுத்து மாணிக்கத்திற்குக் கொஞ்சம் கொஞ்சமாகச் சந்தேகம் உண்டாயிற்று. அவன் மெதுவாக அந்தக் கட்டியைத் தொட்டு அழுத்திப் பார்த்தான். அது மெழுகுபோல இருந்தது. அதைப் பிட்டுப் பார்த்தான். சுலபமாகப் பிரிந்து வந்தது. அதைக் கண்டதும் அவன் மூளே குழம்பிவிட்டது. "ஐயோ! யாரோ என் தங்கக் கட்டியைத் திருடிக்கொண்டு இந்த மெழுகை வைத்துவிட்டார்களே' என்று அலறி ஓலமிட்டான். மாளிகையை விட்டு வெளியே கிளம்பின்ை.

  • சயாரே அணிாைரே

எனக்கு நிறையத் தங்கம்தா! அணிலாரே சயாரே ஆசைதீரத் தங்கம் தா !” என்று பாடிக்கொண்டே அவன் மறுபடியும் வனத்தை நோக்கிப் புறப்பட்டான். எங்கும் நிற்காமல் வனத்தில் புகுந் தான். அங்கும் அந்தப் பாட்டைப் பாடிக்கொண்டே போன்ை. அவனுடைய குரலேக் கேட்டுக் குள்ள நரி மெதுவாக வந்து பார்த்தது. அது நாக்கைத் தொங்கப்போட்டுக்கொண்டு அவன் பின்னலேயே போயிற்று. அதன் நாக்கில் நீர் ஊறிற்து. தங்கமுத்து மாணிக்கத்திற்கு உண்மையாகவே ைபத் தி ய ம் பிடித்துவிட்டது. அவன் பாட்டுப் பாடிக்கொண்டே வனத்தில் அலேந்து திரிந்தான். குள்ள நரி அவனே விடாது தொடர்ந்து கொண்டிருந்தது.” இவ்வாறு மாயக்கள்ளன் கதையைச் சொல்லிக்கொண் டிருக்கும்போதே ஆத்மரங்கனேப் பார்த்தான். ஆத்மரங்கன் படிக்கட்டில் நன்ருகத் துரங்க ஆரம்பித்துவிட்டான். தனது தந்திரம் பலித்ததென்று மாயக்கள்ளன் சந்தோஷமடைந்தான். ஆத்மரங்கண்த் துர்க்கிக்கொண்டு மலேயடிவாரத்திற்கு பழையபடி வந்து சேர்ந்தான்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/78&oldid=867770" இலிருந்து மீள்விக்கப்பட்டது