பக்கம்:மாயக் கள்ளன்.pdf/87

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

10. மின்சாரபுரி மலேயடிவார்த்தில் தூங்கிக்கொண்டிருந்த ஆத்மரங்கன் திடீரென்று விழித்து எழுந்தான். மலேயுச்சிக்குப் ேப - க வேண்டும் என்ற ஆசை விடவில்லே. அவன் ஒரு புதிய உருவம் எடுத்துக்கொண்டான். விஞ்ஞானத்தால் எத்தனேயோ அற் புதங்கள் நடந்திருக்கின்றன. ஆகாய விமானம் நமக்குக் கிடைத்திருக்கிறது. அதில் எறிக்கொண்டு மனிதன் பறவை களைப் போல ஆகாயத்திலே பறக்கிருன். விஞ்ஞானத்தின் உதவியால் இன்னும் எத்தனேயோ ஆச்சரியமான காரியங்களைச் செய்திருக்கிருன். இந்தத் தடவை ஆத்மரங்கன் ஒரு பெரிய விஞ்ஞானியாக உருவமெடுத்தான். அவன் மலேப்படியில் கால் வைக்கத் தொடங்கியதும் மாயக்கள்ளன் வந்து சேர்ந்தான். அவனுக்கு விஞ்ஞானியிடத்திலும் பயமில்லே. அவனேயும் தனது வஞ்சகத்தால் எமாற்ற நினைத்தான். அவன் வழக்கம் போல் கதை சொல்லத் தொடங்கினன். விஞ்ஞானி அதைக் கேட்டுக் கொண்டே மலேயேறலான்ை. 'மின்சாரபுரி என்று ஒரு பட்டணம் இருந்தது. அந்தப் பட்டணத்திலே அணுவரக்கன் என்று ஒருவன் இருந்தான். அவன் விஞ்ஞானத்திலே கெட்டிக்காரன். அவனுக்கு ஈடாக விஞ்ஞானி யாரும் இல்லை. அவன் தன்னுடைய திறமையை உபயோகப்படுத்தி, உலகத்தையே அடக்கி ஆள விரும்பினன். உலகத்திலே இருக்கும் அணுகுண்டு, ஹைட்ரஜன் குண்டு ஆகியவற்றையெல்லாம்விட அதிகமான சக்தியுள்ள ஓர் ஆயுதம் கண்டுபிடிக்க வேண்டும் என்று நினத்தான். அந்த மாதிரி ஒர் ஆயுதம் இருந்தால் உலகத்தையே வென்றுவிடலாம் என்று அவனுக்குத் தோன்றியது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மாயக்_கள்ளன்.pdf/87&oldid=867787" இலிருந்து மீள்விக்கப்பட்டது