பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/13

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கொண்ட அரசனே, கேள்! நீயும் உன் செங்கோலும் எனக்கு முன் ஒரு தூசிக்கு நிகர்.இப்போது நான் உன்னை ஏன் தேடி வந்திருக்கிறேன் என்றுதானே கேட்கிறாய். அதற்கு உடனே விடை சொல்லுகிறேன். உன் மகள் இளவரசி செந்தாமரையை எனக்கு கொடுத்துவிடு. அவளைக் கொண்டு செல்லத்தான் நான் இங்கு வந்திருக்கிறேன்!" என்றான் அந்த மனிதன்.

“ஏ கொடிய மனிதனே, தானம் கேட்பதற்கும் ஓர் எல்லையுண்டு" என்றார் மாராயர்.

“அரசனே, நான் உன் மகளைத் தானமாகக் கேட்கவில்லை. உன் மகளை என்னிடம் கொடு என்று கட்டளையிடுகிறேன். என் கட்டளையை மீறி நடக்க உன்னால் முடியாது. உன் ஐம்பத் தாறு தேசத்துப் படை பட்டாளங்கள் எல்லாம் சேர்ந்து வந்தாலும் என் சுண்டு விரல்

11