பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/14

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

நகத்தைக் கூட அசைக்க முடியாது." என்று பயங்கரமாகக் கூறினான் அந்த மனிதன்.

"ஏ, பைத்தியக்காரனே, வழியைவிட்டு விலகி நில். இல்லாவிட்டால் என் கோபத்திற்கு ஆளாவாய்!" என்றார் மாமன்னர்.

"அரசனே, உன் கோபம் எனக்கு ஒரு துரும்பு! கடைசி முறையாகக் கட்டளையிடுகிறேன். உன் மகளை என்னிடம் கொடுத்து விடு!" என்றான் புலியேறி வந்த அந்தப் பொல்லாத மனிதன்.

“கொடுக்க முடியாது!" என்று கோபாவேசமாகக் கூவினார் அரசர்.

"முடியாதென்றா சொன்னாய்? என்னை இன்னார் என்று நீ இன்னும் அறிந்து கொள்ளவில்லை. ஹா ஹா...ஹா...ஹா..." என்று இடி போலச் சிரித்தான் அந்த மனிதன்.

12