பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

மாமன்னரும் அரசமாதேவியும் இரதத்தை விட்டுக் கீழே இறங்கி வந்தார்கள். பக்கத்தில் இருந்த சில மனிதர்களின் உதவியோடு சாரதி இளவரசியைத் தூக்கிக் கொண்டுவந்தான். அவளைக் கோயிலினுள் கொண்டு சென்று இறைவன் முன்னிலையில் கிடத்தினார்கள்.

மாமன்னர் குருக்களிடம் நடந்த செய்திகளைக் கூறினார். மந்திரவாதியின் தீமைக்கு இலக்காகாமல் தன் மகளைக் காப்பாற்ற வழி சொல்லவேண்டும் என்று கேட்டார்.

அந்தக் கோயில் குருக்கள் மிகுந்த பெயரும் புகழும் உடையவர். அவர் திருநீறு கொடுத்தால் தீராத நோயும் தீரும்; ஆறாத புண்ணும் ஆறும். அவர் தண்ணீர் மந்திரித்துக் கொடுத்தால் காணுமற்போன பொருளும்கைக்கு வந்து சேரும். போகாமற் பிடித்திருக்கும் பேயும் போனேன் போனேன் என்று கதறிக் கொண்டு ஓடிப்போகும். அப்படிப்பட்ட ஆற்றல் வாய்ந்த குருக்களிடம் அரசர் ஆலோசனை கேட்டார்.

அரசர் கூறிய செய்திகளை யெல்லாம் குருக்கள் கேட்டார். பிறகு அரசரையும் அரசியாரையும் எதிரில் அமரச் சொன்னர். தானும் ஓர் ஆசனப் பலகையில் அமர்ந்தார். உள்ளங்கையில் திருநீற்றை எடுத்து வைத்துக்கொண்டு

20