பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/27

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

"வேந்தர் பிரானே, வெறும் பொருளுக்காக யாரும் உயிருக்குத் துணிந்து வர மாட்டார்கள். மேலும் அப்படிப்பட்ட வீர இளைஞன் எங்கிருக்கிறான் என்று யாராலும் கண்டுபிடிகக முடியாது. உங்கள் அரசில் பாதியை-அதாவது இருபத்தெட்டுத் தேசங்களை அந்த இளஞனுக்குக் கொடுத்துவிடுவதாக உறுதியளிக்க வேண்டும். ஐம்பத்தாறு தேசங்களிலும் உள்ள நாடு நகரம் பட்டி தொட்டிகளிலெல்லாம் முரசறைந்து இந்தச் செய்தியைத் தெரிவிக்க வேண்டும். அதன் பிறகுதான் எங்கிருந்தாவது ஓர் இளைஞன் கிளம்பிவருவான்" என்றார் குருக்கள்.

கோயில் குருக்கள் சொன்ன ஏற்பாடு மாமன்னருக்குப் பிடிக்கவில்லை. அவர் தன் மகளை எழுப்ப எவ்வளவு பணம் வேண்டுமானாலும் செலவழிக்கத் துணிந்திருந்தார். ஆனால், எத்தனையோ போர்கள் செய்து, வீரர்களைப் பலி கொடுத்துத் தன் ஆட்சிக்கு உட்படுத்திய பேரரசில் பாதியைக் கொடுக்க அவர் மனம் ஒப்பவில்லை.

மன்னர் பிரான் மனத்தில் தோன்றிய எண்ணங்களைக் குருக்கள் அறிந்து கொண்டார்.

"அரசர் பிரானே, நீங்கள் நன்றாகச் சிந்தித்துப் பாருங்கள். உங்கள் மகளை இக் கொடிய நெடுந் தூக்கத்திலிருந்து எழுப்புவதற்கு

25