பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/32

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அதைப் பிடியரிசிப் பள்ளிக்கூடம் என்றும் சொல்லுவார்கள். அந்தத் திண்ணைப் பள்ளிக் கூடத்து ஆசிரியரும் ஒர் ஏழை. அவருக்கு, படிப்புச் சொல்லிக் கொடுப்பதற்காக ஒவ்வொரு பிள்ளையும் ஒவ்வொரு நாளும் ஒருபிடி அரிசி கொண்டுபோய்க் கொடுக்க வேண்டும். சில பணக்காரப் பிள்ளைகள் அரிசியோடு காய்கறியும் கொண்டுவந்து கொடுப்பார்கள். இந்த வரும்படியை வைத்துக் கொண்டு அந்த ஆசிரியர் தம் குடும்பத்தைக் காப்பாற்றி வந்தார்.

அந்த ஊரிலே ஒரு சிறு கோயில் இருந்தது. அது பிள்ளையார் கோயில். அந்த ஊர் மக்கள் அந்தப் பிள்ளையாரைத்தான் கண்கண்ட தெய்வமாக வணங்கி வந்தார்கள். ஊர்க் கூட்டமும் அங்கேதான்-கோயில் வாசலில் தான் நடக்கும்.

பள்ளிக் கூடத்துப்பிள்ளைகள் நாள்தோறும் அந்தக் கோயிலுக்கு வந்து பிள்ளையாரை வணங்கி விட்டுத்தான்பாடம் படிக்கப்போவர்.

ஒருநாள் பிள்ளையார் கோயில் வாசலிலே முரசடிக்கும் ஓசை கேட்டது. என்றுமில்லாத அதிசயமாய் அன்றுமுரசுச்சத்தம் கேட்டவுடன், ஊரில்உள்ளவர்கள் எல்லோரும் வந்து கோயில் வாசலிலே கூடிவிட்டார்கள். ஆண்கள், பெண்

30