பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/33

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கள் சிறியவர் பெரியவர் எல்லோரும் கூடி விட்டார்கள், அவர்களைப் பார்த்து அந்த முரசறைபவன் கூறினன்:

"ஐம்பத்தாறு தேசங்களையும் அரசாளும் மன்னதி மன்னர், மாவீரர் வெற்றிக் கொடி வேந்தர், அறநெறி பிறழாது ஆட்சி செய்யும் அன்பரசர், மாமன்னர் சோமசுந்தர மாராயர் விடும் அறிக்கை இது. மாமன்னருடைய மகள் அழகுச் செல்வி செந்தாமரையை மந்திரவாதி யொருவன் நெடுந் தூக்கத்தில் கிடக்கும்படி செய்து விட்டான். புலிவாகனமேறி வரும் அந் தப்பொல்லாத மந்திரவாதியின் பெயர் உருத் திரகோபன். அவன் உச்சயினிப் பட்டணத்துக் கருகே யுள்ள பாலைவனத்தின் ஓரத்தே யுள்ள மலைக்குகை யொன்றிலே இருக்கிருன். அவனைக் கொன்று இளவரசியைத் துயிலெழச் செய்யும் வீர இளைஞனுக்கு மாமன்னர் தம் பேரரசில் சரிபாதியைப் பரிசாகத் தருவார்.இந்த வீரச் செயலைச் செய்ய முன் வரும் இளைஞர்கள் எந்த நேரத்திலும் மாமன்னரைப் பேட்டி காணலாம். மாமன்னர் சோமசுந்தர மாராயர் ஆணையிது...டொம்டொம்....மாமன்னர் சோம சுந்தர மாராயர் ஆணையிது டொம்...டொம்... டொம்...

இப்படி மூன்று முறை மாமன்னர் அறிக் கையை வாசித்து முரசு கொட்டி விட்டு அந்த ஆள் அடுத்த ஊரை நோக்கிச் சென்று விட்டான்.

31