பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/44

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முயற்சி வெற்றி பெறுவதாக!" என்று கூறிக் குதிரையைக் கொடுத்துச் சென்றான் அவன்.

மாமன்னரிடம் தான் கேட்காமலே அவர் குதிரை கொடுத்தனுப்பியதை எண்ணி மணிவண்ணன் மகிழ்ச்சியடைந்தான். தாவி ஏறி அதன் முதுகில் அமர்ந்தான். அந்த அழகிய பஞ்ச கல்யாணிக் குதிரை பாய்ந்து சென்றது.

ஒய்வு ஒழிச்சல் இல்லாமல் அந்தக் குதிரை இரவும் பகலும் ஒடிக்கொண்டேயிருந்தது. தானும் குதிரையும் உணவுண்ணுவதற்கு ஆங்காங்கே தங்கிய நேரம்தவிர மீதி நேரமெல்லாம் மணிவண்ணன் பயணம் செய்து கொண்டே யிருந்தான். இரவும் பகலும் இடைவிடாது சென்று கொண்டேயிருந்தும் ஏழு நாட்களான பின்னும் உச்சயினிப் பட்டணம் வந்து சேரவில்லை. போகப்போக இன்னும் போக வேண்டும் என்ற நிலையிலேயே இருந்தது.

ஏழாவது நாள் நண்பகல். வெய்யில் கொளுத்துகின்ற நேரம். வழியில் ஒரு முனிவர் தென்பட்டார்.

மணிவண்ணன் குதிரையை நிறுத்தினான் மெல்லக்கீழேஇறங்கினான்.முனிவரின் அருகில் சென்று இருகைகூப்பி அவரை வணங்கினான்.

42