பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/45

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

உச்சயினிப் பட்டணத்திற்கு வழி எது என்று கேட்டான்.

அந்த முனிவர் வாய்திறந்து பதில் எதுவும் சொல்லாமல் கிழக்கில் செல்லும் பாதையைக் காட்டினார்.

வடக்கேயிருக்கும் பட்டணத்திற்குக் கிழக்கே செல்லும் பாதையைக் காட்டுகிறாரே என்று மணிவண்ணன் முதலில் கலங்கினான். அதே பாதை மீண்டும் வளைந்து வடக்கு நோக்கிச் செல்லக்கூடும் என்று தன்மனத்தைத் தேற்றிக் கொண்டான்.

முனிவரை மீண்டும் வணங்கிக் குதிரையின் மீதுபாய்ந்தேறினான்.கிழக்கு நோக்கிச்செல்லும் சாலையில் திரும்பினான். அந்தச் சாலை கிழக்கு நோக்கி ஒரே நேராக நெடுந்துாரம் சென்று கொண்டிருந்தது. கடைசியில் ஓரிடத்தில் தெற்கு நோக்கித் திரும்பியது.

மணிவண்ணன் மனத்தில் ஐயம் பிறந்தது. வடக்கு நோக்கிச் செல்லவேண்டிய நான் தெற்கு நோக்கிச்சென்றால்காலமும் பொழுதும் வீணாகி விடுமே. வழிகாட்டிய அந்த முனிவர் பைத்தியக்காரரா? அல்லது வாய் பேசாதது போலவே காதும் கேட்காதவரா? ஒருவேளை