பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அந்தப் பெண்மணி யார் என்று அவனுக்குத் தெரியாது. அவள் எதற்காகத் தன்னை எதிர்பார்த்துக் கொண்டிருந்தாள் என்றும் தெரியவில்லை.

"அம்மா என் பெயர் மணிவண்ணன். உச்சயினிப் பட்டணத்தில் இருக்கும் மந்திரவாதியைத் தேடிக்கொண்டு புறப்பட்டேன்." என்று மணிவண்ணன் தன்னைப்பற்றி அறிமுகப் படுத்திக் கொள்ளத் தொடங்கின்னான்.

"எல்லாம் தெரியுமடா மகனே, எல்லாம் தெரியும். உன் கையால்தான் அந்த மந்திரவாதி சாகவேண்டும் என்று விதி இருக்கிறது. இருந்தாலும் அவனிடம் நீ எச்சரிக்கையாக இருக்கவேண்டும். அதற்குரிய வழிகளை நான் சொல்லுகிறேன். முதலில் நீ இந்தப் பழத்தைச் சாப்பிட்டு உன் பசியைத் தீர்த்துக்கொள்" என்றாள் அந்தப் பெண்மணி.

அவள் கையில் ஒரு மாம்பழம் இருந்தது அதைத் தின்ற உடனே மணிவண்ணனுடைய பசி மாத்திரமல்லாமல் உடல்சோர்வும் அகன்று விட்டது. அவள் ஒரு மந்திரக்காரியாக இருக்குமோ என்று எண்ணின மணிவன்ண்ணன்.

49

மா-4