பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/54

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

படுத்தி அந்த மந்திரவாதியைக் கொன்றுவிடு. அதன் பின் என்னிடம் திரும்பி வா. இளவரசியைத் துயில் எழுப்பும் முறையைச் சொல்லுகிறேன். போ. புறப்படு. வெற்றியுடன் திரும்பி வா" என்று வாழ்த்துக் கூறி அனுப்பினாள் அந்த வனதேவதை.

மாணவன் மணிவண்ணன் ஒருமுறை கேட்டபாடத்தை ஒன்பது ஆண்டுகளானாலும் மறக்கமாட்டான் என்பது பிடியரிசிப் பள்ளிக் கூடத்து ஆசிரியருக்குத் தெரிந்த உண்மை. அந்த உண்மை வனதேவதைக்குத் தெரியாமலா இருக்கும். அவள் சொலலிய ஒவ்வொரு சொல்லையும் கவனமாகக் கேட்டு மனத்தில் பதித்துக்கொண்டான் மணிவண்ணன்.

வனதேவதை கொடுத்த சேணத்தைக் கொண்டுபோய்க் குதிரையின் முதுகில் பூட்டினான். அவள் கொடுதத பொன்முடியைத் தலையிலே அணிந்து கொண்டான். வைரவாளை இடையிலே கட்டிக்கொண்டான். தாவி ஏறிக் குதிரையின் மேல் உட்கார்ந்தான். வனதேவதையின் பளிங்குக் குளத்திற்குள் விழுந்து குளித்ததாலும், அங்குள்ள வளமான புற்களைக் கடித்துத் தின்று அசை போட்டதாலும் குதிரை

52