பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/57

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

ணன் தொலைவிலேயே அதை நிறுத்தினன். ஒரு மரத்தடியிலே அதைக் கட்டிப்போட்டான். கால்நடையாகவே குகை வாசலை நோக்கி நடந்தான்.

மணிவண்ணன் உருவத்தை அந்தப் புலியால் பார்க்க முடியவில்லை. ஆனால் அது மோப்பத்தினுல் மனித வாசம் அடிப்பதைக்கண்டு கொண்டது. உடனே பேரோலமிட்டு உறுமியது.

அந்தப் பயங்கரமான புலியின் உருவத்தை நேரில் கண்டு, அதன் உறுமல் ஒலத்தையும் காதால் கேட்டவர்கள் அந்தப் பயத்தின் அதிர்ச்சியிலேயே உயிரை விட்டிருப்பார்கள். மணிவண்ணன் சிறிதுகூட மனங்கலங்கவில்லை. மந்திரவாதியைக் கொன்று இளவரசியைத் துயில் எழுப்ப வேண்டும் என்ற ஒரே குறிக்கோள்தான் அவன் நெஞ்சில் நிறைந்திருந்தது. வேறு எவ்விதமான நினைப்புகளுக்கோ உணர்ச்சிகளுக்கோ அவன் உள்ளத்தில் இடம் சிறிது கூட இல்லை. அவன் சிறிதும் அச்சங் கொள்ளாமல் உருவிய வாளுடன் குகையை நெருங்கினன்.

அவன் நெருங்க நெருங்கப் புலியின் உறுமல் ஒலம் அதிகமாகியது. குகையின் உள்ளே

55