பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/58

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

யிருந்த மந்திரவாதி ஏதோ கெடுதல் வருகிறதென்று தெரிந்து கொண்டான்.

புலி உறுமுகிற காரணம் எனை என்று தெரிந்து கொள்வதற்காக அவன் குகை வாசலுக்கு வந்தான். ஆனல் அவன் குகை வாசலுக்கு வந்து சேர்ந்தபோது புலி உடல் பிளந்து இறந்து கிடந்த காட்சியைத்தான் கண்டான்.

அந்தப் புலியை இழந்தபோதே அவன் தன் பாதி உயிரை இழந்தது போலானன். தனக்கு நிகரான எதிரி எவனுமே உலகத்தில் இல்லை என்று எண்ணிக் கொண்டிருந்த அந்த மந்திரவாதியின் மனம் அப்போதுதான் கலங்கத் தொடங்கியது. யாரோ தன்னைக் காட்டிலும் மாயம் தெரிந்தவன், யாரோ தன்னைக் காட்டிலும் வலிமை மிக்கவன், யாரோ தன்னைக் காட்டிலும் அறிவு மிக்கவன் தன்னைக் கொல்லவென்றே புறப்பட்டு வந்திருக்கிறான் என்று புரிந்துகொண்டான் மந்திரவாதி.

அந்த நினைப்பே அவன் உடலை வெடவெட வென்று நடுங்க வைத்தது.

வந்திருப்பவன் யார் என்று தெரிந்து கொள்ள எண்ணினன். மணிவண்ணனே அவன் கண்ணுக்குத் தெரியாமல் அவன் எதிரி

56