பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/60

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

எதிரி அருகில் நிற்கிறான். கண்ணுக்குப் புலப்படாமல் நிற்கிறான். ஆருடம் கணித்துப் பார்த்தால்தான், கண்ணுக்குத் தெரியாதவனின் உருவத்தையும் கண்டுகொள்ள முடியும். அதற்கு அப்போது நேரமில்லை. செய்யக்கூடிய தெல்லாம் தப்பி ஓடுவதுதான். ஒடித் தப்பிவிட்டால் எதிரி திரும்பிய பிறகு குகைக்கு வரலாம் என்று எண்ணினான்.

மந்திரவாதி தப்பி ஓட முயலும்போது அவன் கண்ணுக்கு எதிரே ஒரு வாள் தோன்றி அவன் வழியை மறித்தது. வாளின் நிலையைக் கண்டு மந்திரவாதி மணிவண்ணன் நிற்கும் இடத்தை எளிதாக அறிந்து கொண்டான். திரும்பித் தாக்க முயன்றான். அவன் கையில் எவ்விதமான ஆயுதமும் இல்லை. எப்போதும் இருக்கும் பெருஞ்சக்தி வாய்ந்த மந்திரக் கோலும் அப்போது அவன் கையில் இல்லை; துன்பம் வந்தால் சேர்ந்து வரும்; அதைத் தவிர்க்க வழியில்லாத போதுதான் அதிகமாக வரும்.

மந்திரவாதி தன் கையினலேயே கண்ணுக்குத் தெரியாத எதிரியை எதிர்த்துப் போராடவேண்டியிருந்தது. அவன் ஓங்கிக் குத்திய

58