பக்கம்:மாயத்தை வென்ற மாணவன்.pdf/62

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

குதிரையை அவிழ்த்து அதன் முதுகில் ஏறி உட்கார்ந்தவுடன் அது நேராகக் காற்றில் பறந்து மேகங்களை ஊடுருவிக் கடந்து, வன தேவதையின் மணிமண்டபத்தில் வந்திறங்கியது.

மணிமண்டபம் முன்பிருந்ததைவிட அழகாக விளங்கியது. அதைச் சுற்றிலும் காட்டு மலர்களால் ஆன தோரணங்களும் கொடிகளும் கட்டப்பட்டிருந்தன. ஆண் தெய்வங்களும் பெண்தெய்வங்களும் மாளிகைக்குள்ளும் புறமும் போவதும் வருவதுமாக இருந்தனர்.

வாசலில் மணிவண்ணன் இறங்கியவுடன், அந்த மணிமண்டபத்து வனதேவதை ஓடி வந்தாள். அவனை அன்போடு வரவேற்றாள்.

"வா மகனே வா, உன் வெற்றியைக் கொண்டாட வானுலகிலிருந்து தெய்வங்களெல்லாம் வந்து சேர்ந்திருக்கின்றனர்” என்று கூறி உள்ளே அழைத்துச் சென்றாள்.

உள்ளே ஒரு கூடத்தில் மின்னும் பொன்னிழைகளால் நெய்யப்பட்ட பந்திச் சமுக்காளம் விரிக்கப்பட்டிருந்தது. அந்தப் பந்திச் சமுக் காளத்தின் எதிரிலேயே பெரிய பெரிய வாழை இலைகள் விரித்து வைக்கப்பட்டிருந்தன. அவ்விலைகளிலே பலவகையான இனிய

60