பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

12. வேதநாயகரின் சாதனைகள்!

டத்தொன்பதாம் நூற்றாண்டின் இடையிலே எழுந்த இயக்கங்களின் மேன்மையான கொள்கைகளை எல்லாம் நன்றாக ஆராய்ந்து, தெளிந்து பழங்காலப் பெருமைகளைக் கை கழுவாமல், எதிர்காலப் போக்கை மன சிம்மாசனத்திலே அமர்த்தி நிகழ்காலத்திலே தமிழ் மக்களுக்கு வழிகாட்டியவர் மாயூரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை.

நீண்ட நெடுங்காலமாக உறக்கத்திலே ஊஞ்சலாடிக் கொண்டிருந்த தமிழ்ப் பெருமக்கள் இதயத்திலே முதன் முதலாகத் தேசபக்திக் கனலை மூட்டியவர் வேதநாயகம் பிள்ளை.

தமிழ்ச் சான்றோர்களின் நீதிகளையும், அவர்களது மாண்புகளையும், அவர்கள் செய்த தொண்டுகளையும் தனது பேச்சால் எழுத்தால், செயலால் நம்மைச் சிந்திக்க வைத்தவர் வேதநாயகம் அவற்றின் அடிப்படையிலே காலத்துக்கு ஏற்றவாறு நமது சமூக அமைப்பை மாற்றிப் புது மாதிரிகளுக்கும் பொருந்தச் செய்து, உலகிலே புகழ்வாய்ந்த சன சமூகங்களிலே தமிழர் சமுதாயமும் ஒன்றாகக் காட்சியளிக்குமாறு செய்து உதவியர் வேதநாயகம்.

ஒரு காலத்திலே உயர்ந்த நிலையிலே இருந்த தமிழ்நாடு, அவர் காலத்திலே பல்துறைகளிலும் தாழ்ந்து வருவதை அறிந்து,