பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/108

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 重静?

பட்டிருந்த சதர்ன்கோர்ட் தீர்ப்புகளை எல்லாம் ஒன்று திரட்டி, அதை அப்படியே தமிழிலே மொழிபெயர்த்து, 1862ஆம் ஆண்டில் சட்ட நூலாக வெளியிட்ட பெருமை வேதநாயகரையே சேரும். இப்படி சட்ட நுணுக்கங்களைப் பற்றி தமிழிலே அமைந்த முதல் நூல் இது அதன் கர்த்தா வேதநாயகம் பிள்ளையே

வேதநாயகர் ஒரு மெய்க்கிறித்தவர், அவர் இறை தத்துவத்தை ஒன்றே தெய்வம் என்ற கொள்கையில் ஏற்றவர். அதனால், திருவருள்மாலை', திருவருள் அந்தாதி; தேவமாதா அந்தாதி எனும் நூல்களை கி.பி. 1873 ஆம் ஆண்டில் எழுதி வெளியிட்டார்.

தமிழ் நாவல் உலகின் தந்தை என்று போற்றும் வகையில் பிரதாப முதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி போன்ற நாவல்களை, கல்கி கிருஷ்ண மூர்த்தி, சாண்டில்யன் போன்றவர்கள் பிறப்பதற்கு முன்பே 1876 - 1885 ஆம் ஆண்டுகளில் முதன் முதலாகத் தமிழ்மொழியில் எழுதி வெளியிட்ட செயற்கரிய செய்த பெரியராக இன்றும் விளங்கிக் கொண்டிருக்கின்றார்.

'உலகிலே ஒவ்வொன்றாக நாளடைவிலே வெளிவருகின்ற இரகசியங்களின் சின்னங்கள், வெகு காலத்துக்கு முன்னமே கர்ணப்பட்டன என்று பேனா மன்னன் வால்டேர் கூறுகின்றார்.

சிறுகதை, நாவல் போன்ற இலக்கிய வகைகள் சமீப காலத்திலே தோன்றியவை என்பது சிலரது நம்பிக்கை. ஏறக்குறைய 3500 ஆண்டுகளுக்கு முன்பிருந்த தொல்காப்பியருக்கு முன்னமேயே, தற்போதைய இலக்கிய வகைகள் எல்லாம் இருந்திருந்தன என்று கூறினால், நம்பமாட்டார்கள்.

தொல்காப்பியர் பெருமான், தொல்காப்பியம் எழுதிய காலத்திலேயே வழங்கிய இலக்கிய நூல் வகைகளையும், வளத்தையும் அவர் கூறும் போது நமக்கு பேராச்சரியமாக இருக்கின்றது. இதோ அவர்