பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

f

i

என்.வி. கலைமணி

பழக்கமானவர்கள். நிகழ்ச்சிகளும் நம் கண்முன்னே நடப்பது போலவே இருக்கின்றன.

எனவே, பிரதாபமுதலியார் சரித்திரம், சுகுண சுந்தரி இந்த இருவர்களுடைய கதைப் பேச்சும், செயலும் நம்மிடயே கலந்து விடுகின்றன போல காட்சிதருகின்றன. ஆதலால், இந்த கற்பிதக் கதைகள் நாவுக்கு நயம், செவிக்குத்தேன்; மனதுக்கு மகிழ்ச்சி; அறிவுக்கு வளர்ச்சி, பொழுது போக்கிற்கு ஒரு புரட்சி.

பிரதாபமுதலியார் சரித்திரம் ஒரு ரொமான்ஸ் கதைதான்். என்றாலும், வீரம், காதல் பயம், பொறாமை முதலிய மானிட உணர்ச்சிகளின் எதிரொலியாய் தென்படுகின்றது. ஒன்றுக்கு ஒன்று ஒவ்வாது முரண்பட்ட மானிட இயல்புகளின் போராட்டமாய் கதை நகர்கிறது.

வாழ்க்கையை ஆதாரமாகக் கொண்டதுதான்் நாவல். ஆனால், அது வாழ்க்கையைத் திருத்துவதற்கும் உதவுகிறது. அது, பிரசாரக் கருவியாய் எழுதப்படுவதல்ல; சமூகம், அரசியல் பிரச்சனைக்ளை விளக்க அல்லது தீர்க்க எழுதப்படுவதல்ல அது என்றாலும், சீர்திருத்தங்களுக்கு அனுகூலமான மனப்பான்மையை அது உண்டு பண்ணுகிறது.

சமூக ஊழல்களைப் பரிகாசம் செய்ய அது ஏற்பட்டதல்ல; என்றாலும், குற்றங் குறைகளை அது நையாண்டி செய்கிறது. ஒழுக்கத்தை ஒம்புவதோ போதிப்பதோ அதன் கடமையல்ல; செய்திகளைச் சித்தரிக்க வேண்டுமே அன்றி, சரியா தப்பா என்று எடை போடக் கூடாது. என்றாலும், ஆசிரியனுடைய செய்தி றனால், சம்பவங்கள் இணைப்பால் அது போதித்து விடுகிறது.

ஆசிரியனுடைய அனுதாபங்களும், கருத்துக்களும், உணர்ச்சி களும் எப்படியும் இடம் பெற்று. வாசகர்களின் மனத்தைக் கிளறி விடுகிறது.