பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/113

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

# 12 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

நவீனம் அல்லது நாவல் என்பது தத்துவ நூலல்ல; எனினும், மெய்ப் பொருள் அறிவு அதிலே இடம்பெறாமல் இல்லை. பிரதாப முதலியார் சரித்திரம் தமிழருடைய வாழ்க்கைச் சித்திரம்;

பிரதாப முதலியார் சரித்திரம்!

பிரதாப முதலியார் சரித்திரம் என்ற நவீனத்தில், வேதநாயகம் பிள்ளை சமுதாயத்தில் கண்டத்தையும் கேட்டதையுமே வைத்துக்கதை பின்னியுள்ளார். தமது கதைக்கென்று அவர் தேர்வு செய்த சம்பவங்கள், அழகும் சுவையும் கூடியன. உயிரோட்டமுடையது; உறுதியான உண்மைகளை உரைப்பது உள்ளத்தைக் கிளறி, உணர்ச்சியைத் துய்மை செய்கிறது.

கதையைக் கையாளும் முறையிலே, மக்கள் இடையே காணப்படும் முரண்பாடுகள், பூசல்கள், எதிர்ப்புக்களை சமரசப் படுத்தி, அவற்றினூடு மறைந்து கிடக்கும் இசைவை வெளிக் கொணர்ந்து விளக்குகிறார் வேதநாயகர்.

தற்போதைய தமிழ் எழுத்தாளர் சிலர் தங்களைச் சூழ்ந்துள்ள காட்சி நிகழ்ச்சிகள் சிலவற்றைப் பார்த்து, அல்லது தாம்கண்ட கேட்டவற்றைத் தம் நினைவிலே இருந்து தேர்வு செய்து தொகுத்து, தங்கள் சொந்த விருப்பு வெறுப்புக்களைக் கதையிலே மறைக்க எழுதுகிறார்கள்.

வேறுசில எழுத்தாளர்கள், வாழ்க்கையிலே காணப்படும் அனைத்தையும் நல்லது கெட்டது. பெரியது சிறியது எதுவும்-மிச்ச மின்றி படப் பிடிப்பாக எழுதுகிறார்கள்.

இன்னும் சிலர், ஆபாசங்களை, அவலட்சணங்களை அளவுகடந்து மிகைப்படுத்திச் சித்தரிக்கின்றார்கள். மேலும் சிலர், கோபம், பொறாமை, காமம் போன்ற கீழ்த்தர உணர்ச்சிகளைத்