பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 115

தர்பார் நடத்தியவர்கள் இவர்களுடைய பாடல்கள் தெலுங்கு, சமஸ்கிருத மொழிகளிலே பிறந்தவை. ஆனால் இவர்கள் வாழ்ந்தது தமிழ் நாட்டிலே தஞ்சை மாவட்டம் தான்் இந்த மும்மூர்த்திகளின் சங்கீதப் பண்ணையாக இருந்து வந்தது.

தமிழிலே இசைப் பாடல்

தமிழ் மொழியிலே பிறந்த இசைப் பாடல்கள் எல்லாம் புராணக் கதைகளைப் பற்றியே எழுந்தன. இதிகாசக் கதைகளையே இசைத்தன. எடுத்துக் காட்டாக இராம நாடகம், கந்த புராணம் கீர்த்தனைகளைக் கூறலாம். கோபாலகிருஷ்ண பாரதியார் கூட நந்தனார் கதையில் சில மாற்றங்கள் செய்து நந்தனார் கீர்த்தனைகளை இயற்றினார். அதற்காகப் படாத துன்பங்களையும் அனுபவித்தார்.

தியாகையர் போன்றவர்கள் முயற்சிகளால் தமிழ் புறக்கணிக்கப் பட்டு, சங்கீதத்துக்குரிய மொழி தெலுங்கே என்று பசிரங்கமாகப் பிரகடனமானது. தியாகையர் தனது பாடல்களைத் தெலுங்கு மொழியிலே எழுதினார். அப்பாடல்கள் தெருத்தெருவாகவும். பெருமையோடும் பாடப்பட்டது.

வேதநாயகம் பிள்ளை கொதித்து எழுந்தார் காரணம், அவள் தமிழர் அதனால், தனது தாய் மொழியிலே இசைப் பாடல்களை நூற்றுக் கணக்காக எழுதினார். சமயச் சார்பின்றி எவர் மனமும் புண்படாமல் பண்பட்ட உள்ளத்தோடு, பொதுவாகச் சமுதாயம் முழுமைக்குமாக, சாகித்தியங்களை வேதநாயகம் பிள்ளை எழுதினார்.

தியாகையர் தனது தெலுங்குக் கீர்த்தனைகளால் இராம பக்தியை வளர்த்தார். கோபால கிருஷ்ண பாரதியார் தனது பாக்களால் சிவ பக்தியைப் பரப்பினார். அதே நேரத்தில்,