பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/118

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 117

சங்கீதத்திலே வழங்கும் உருப்படிகளை மூன்று பிரிவாக வகுக்கலாம். ஒன்று. வாய்ப் பாடலுக்கு அமைந்தவை. மற்றது கருவியிலே வாசிப்பதற்குத் தகுந்தவை; ஏனையது நாட்டியத்துக்கு ஏற்றவை. இவற்றுள் வேதநாயகத்தின் இசைப்பாடல்கள் பாடுதற்கமைந்தவை. இவை இசையை முதன்மையாகக் கொண்டவை அல்ல; நாட்டியத்துக்குத் தக்கவை அல்ல. சமுதாயத் திலே நல்லொழுக்கம், நல்லுணர்ச்சிகளை இசைப் பாடல்கள் மூலம் பரப்புவதே வேதநாயகம் பிள்ளையின் குறிக்கோள்.

பாட்டும் கீர்த்தனையும்!

உருப்படிகளிலே எளிமையானது கீதம். ராகத்தின் களையையும் சஞ்சாரக் கிரமங்களையும் கீதம் நன்கு விளக்கும். பல்லவி, அனுபல்லவி, சரணம் என்ற உறுப்புகள் கீதத்திலே இல்லை. சங்கதிகள் அதிலே வராது. தாதுக்கள் எளிய நடையிலே அமைந்திருக்கும்.

கீதம் என்றால் என்ன?

கீதம் இருவகைப் படும். சாமானிய கீதம் ஒன்று; இதன் சாகித்தியம் கடவுள் வணக்கமாக அமைந்திருக்கும்; ஏனையது. இலக்கண கீதம் எந்த ராகத்தில் கீதம் அமைகிறதோ, அந்த ராகத்தின் இலக்கணத்தை இதன் சாகித்தியம் விளக்கும்.

கீதம் என்பது பாடல், ஆனால், சங்கீதத்திலே கீதம் என்பது மேலே சொன்ன பண்புகளையுடைய பாடலை மட்டும் குறிக்கும். கீதங்களை இயற்றியவர் புரந்தரதாசர், கோவிந்த தீட்சீதர், வேங்கடமகி போன்றவர்கள்.

கன்னடம், தெலுங்கு, வடமொழிகளிலே மேற்கண்டவர்கள் கீதங்களை எழுதினார்கள். ஆனால், வேதநாயகம் பிள்ளை எழுதிய