பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/12

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2. வேதநாயகம் பிள்ளையின் வாழ்க்கை வரலாறு

'நெருநல் உளன்ஒருவன் இன்றில்லை என்னும் பெருமை உடைத்துஇவ் உலகு. (336-குறள்)

‘நேற்று இருந்தான்் ஒருவன், இன்றில்லை அவன், என்ற பெருமையை உடையது இந்த உலகம் என்று திருவள்ளுவர் பெருமான் நிலையாமையைப் பற்றிக் கூறினார். அதாவது: செல்வம், இளமை, யாக்கை, உயிர் வாழ்க்கை, இன்பம், துன்பம், அழகு போன்றவை என்றுமே நிலையுடையன அல்ல என்பதை வள்ளுவர் விளக்கியுள்ளதற்கு ஏற்ப, மாயூரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளையும் நிலையாமை ஆழியிலே அழுந்தி மறைந்து போனார்.

ஆனால், அதே வாழ்வியல் விஞ்ஞானி, வாழ்க்கைக்கு வரம்பு கட்டிய இலக்கணத்தை வரையறுத்த போது, 'தோன்றில் புகழொடு தோன்றுக அஃதிலார் தோன்றலின் தோன்றாமை நன்று' என்றார்.

பிறக்கும் போதே ஒருவன் புகழோடு பிறக்க முடியாது; அப்படிப் பிறந்தவன் யாரும் இல்லை. இதிகாசத்திலும் சரி, புராணத்திலும் சரி. புகழொடு பிறந்ததற்கு எவனும் ஆதாரமாக இல்லை; அவ்வாறு பிறக்கவும் முடியாது.

அதுமட்டுமல்ல, அழுதுகொண்டே பிறக்கின்ற எல்லாக் குழந்தைகளுமே புகழ்பெறுவது எளிதான் ஒரு செயலுமன்று: என்னதான்் புகழை நாடி, தேடி ஓடினாலும் அந்தப் புகழுக்கு