பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/14

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 13

வேத நாயகம் பிள்ளையின் முப்பாட்டனார் மதுர நாயகம் பிள்ளை. ஏறக்குறைய இருநூறு ஆண்டுகளுக்குமுன்புவாழ்ந்தவர். அக் காலத்தில் திருச்சியிலும், மதுரைப் பகுதிகளிலும் ஆற்காட்டு நவாபுகள் சந்ததியினரும், நாயக்க மன்னர்களின் பரம்பரை யினரும், போதாக்குறைக்கு வியாபாரிகளாக வந்த ஐரோப்பிய நாட்டினரும் நாடுபிடிப் போட்டி களிலே ஈடுபட்டிருந்தார்கள் என்பது வரலாறு.

மண்ணாதிக்க வெறி என்றாலே கொள்ளையும் குழப்பமும், உயிர் உடமைகளுக்கு அபாயமும் ஆபத்தும், ஏற்படுவது சகஜமாக இருந்தது, ஒதிய நெறியிலே நில்லாமல் ஒழுக்கம் மறந்துபோன சாதிகள் ஒன்றோடு ஒன்று மோதி அழிவதும் இயற்கை. இவற்றையெலாம் கண்ட மதுரநாயகம் பிள்ளை என்ற மிராசுதாரர் குடும்பம் கிறித்துவ மதத்தைப் பின்பற்றிடச் சேர்ந்துகொண்டது. நாளுக்கு நாள் இயேசு பெருமான் இலட்சியங்கள் மீது அளவிடற்கரிய பற்றும் பக்தியும், பாசமும் அவர்களிடம் வளர்ந்து வந்தது. ஆனால் உறவு முறைகள் சும்மா இருக்குமா?

சைவ விரோதி, கார்காத்த குல எதிரி, கொங்கு ராய கோத்திரத்தின் பழமைக்கும், பண்புக்கும் பகைவன் என்று அன்று ஏளனமாகப் பேசப்பட்டார் மிராசுதார் மதுரநாயகம் பிள்ளை. அவரைச் சாதிக்கட்டுப்பாடு செய்து ஊரிலே ஒதுக்கிவைத்தார்கள். எதற்கும் அஞ்சாமல், சாதுரியமாகவும், சாமர்த்தியமாகவும், பெரிய வணிகப் பிரபு ஆகவும், ஏழை எளிய மக்களுக்கு உதவிடும் பரோபகாரியாகவும் ஊர்மெச்ச அக்கம் பக்கம் கிராமத்து மக்கள் மதிக்கும் வகையில் செல்வாக்குடன் வாழ்ந்தார். இத்தகைய ஒரு பணம் படைத்த குடும்பத்திலே மதுர நாயகத்தின் மகள் வயிற்றுப் பேரனாகப் பிறந்தார் நமது வேதநாயகம் பிள்ளை.

கி.பி. 1606-ஆம் ஆண்டில் ராபர்ட்டி நொபிலி என்பவர். தத்துவப் போதகர் என்ற தமிழ்ப்பெயரோடுராமநாதபுரம்சேதுபதி