பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/20

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 49

பழங்கூழ் உண்ட உமக்குப் பாலுடன் சோறு

பயப்படர் திரும்,உமக்(கு)

ஆயுசு நூறு - மைத்துனரே...

எருமையும் நுழையும் உம (து)

இரு காதின் தொள்ளை

இனி, உமக்கு வச்சிரக்

கடுக்கண்கள் கொள்ளை

ஒருவகையும் இல்லாமல் உற்றீரே சள்ளை

ஊர்அதிபதிக் கிப்போது

உகந்தமாப் பிள்ளை-மைத்துனரே...

பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்:

வேதநாயகம் இளமையில் கல் என்ற அவ்வைப் பெருமாட்டியின் அமுதமொழிக்கேற்றவாறு, காலத்தோடு கற்கும் கல்வியைக் கைவிடாமல், கவனத்தோடு, கருத்துன்றிப் படித்தார். கற்க வேண்டிய நூல்களைக் கற்று, அதன்படி நின்று சிந்தித்து, சிந்தனையின் சீரிய தெளிவால் அறிவு ஒளிகளைப் புதிதுபுதிதாகப் பெற்றார். பாடம் ஏறினும் ஏடது கைவிடேல்' என்பது பழமொழியாகையால் அதற்கேற்ப பெரும் பேரறிவாளராய் புகழ்பெற்று, யாதான்ும், நாடாமல், ஊராமல் என்னொருவன் சாந்துணையும் கல்லாதவாறு என்ற, குறட்பாவிற்கேற்றவாறு அவர் சாகும்வரை படித்துக் கொண்டே இருந்தார்.

இதோ, வேதநாயகம் பிள்ளை தான்் எழுதிய தினத்தின்

வாயிலாக, பிரதாப முதலியாரை நம்மிடையே பேசவிடுகிறார் கேளுங்கள்: