பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/22

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 21

திருவள்ளுவர், கம்பர் முதலிய மகாவித்துவான்கள் தங்களுடைய சுயமுயற்சியால் கவிசிரேட்டர்கள் ஆனார்களே தவிர, ஆசிரியர்களிடத்து அவர்கள் கற்றுக் கொண்டது அற்பமாகவே இருக்கும். அந்த வித்துவான்கள் எல்லோரும் மானிடப் பிறப்பே. அல்லாமல் தெய்வீகம் அல்லவே? அவர்களைப் போல நீயும் முயன்று கல்விகற்றால் அவர்களுக்குச் சமானம் ஆவதற்கு ஆதங்கம் என்ன?

பள்ளிக் கூடங்களிலே பயிற்சியை முடித்து வெளியேறு கிறவர்களுக்கு எத்தகைய அறிவுரை இது நம்மவர் பெரும்பாலும் பத்திரிகைகளைப் புரட்டுவதே அன்றிப் புத்தங்களைத் தொடவும், தற்போது கூசுகின்றார்கள். பத்துவருடம், பதினைந்து வருடம் கல்லு, ரிகளிலே பயின்றும் பரீட்சைகள் பலவற்றுக்குப்படித்தும், படிப்பது ஒரு பழக்கமாக நம்மவர்க்குப் பிடிபடவில்லை.

படித்தளவும் உடலிலே ஒட்டவில்லை; உள்ளத்தில் ஊறவில்லை; கலாசாலைகளுடன் கல்வியும் முடிந்ததாகவே அவர்கள் கருதுகிறார்கள், கற்றது கைமண்ணளவு கல்லாதது உலகளவு என்பதை அவர்கள் எண்ணுவதில்லை. இருபதாவது வயதளவிலே எய்திய பி.ஏ.அளவிலேயே அவர்கள் அமைந்து விடுகிறார்கள். கல்வி பிலே இவர்கள் வளர்ச்சி எய்துவதும் இல்லை. இது வருந்தத் தக்கதே. கல்வியின் பயன் கடவுளை அறிவதே!

கடந்த நூற்றடிலே வாழ்ந்த ஐரோப்பிய நாடுகளில் தோன்றிய அறிஞர்சிலர், பழுத்த நாத்திகத்தைம் பகுத்தறிவு என்று பரப்பி வந்தனர். இவர்களிலே முக்கியமானவர்கள் யார்? யார்? தெரியுமா? டார்வின் - Darwin, அக்சிலி - Huxley, ஸ்பென்சர் - Spancer, டிண்டால் - Tinda ஆங்கிலம் கற்ற தமிழர் சிலரும் இந்த அறிஞர்கள் எழுதிய நூல்களையே விரும்பிப் படித்தார்கள்.