பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/26

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 25

வதிலுமான மொழி பெயர்ப்புப்பணி அதிகமாக இருந்தது. மொழி பெயர்ப்பு வேலை செய்யும் போது, அதனதனில் பொருள் முரண் ஏற்பட்டு விடக் கூடாது. ஏனென்றால், அவையனைத்தும் நீதிமன்றத் தீர்ப்புகள். எனவே, பொறுப்பாக மொழிபெயர்க்கும் பணி என்பதனால், அந்த வேலைக்கு வேதநாயகம் தான்் தகுதியானவர் என்பதறிந்து நீதிமன்றம் அவரையே நியமித்தது.

இவ்வாறு அமர்த்தப்பட்டதான்து, பிற்காலத்தில் தமிழ் நாவல் எழுதும் பணிக்கு, இந்த மொழி பெயர்ப்புப் பணி அவருக்கு வசதியாகவும், சுலபமாகவும் அமைந்தது. அதனால் தான்், தமிழில் அவர் வசனநடை எழுதுவதிலே மிக நல்ல தேர்ச்சிப் பெற்றவராக விளங்கினார்.

சிவில், கிரிமினல் சட்டங்கள் அப்போது தமிழ்நாட்டுக்குப் புதிய பணிகளாகப் புகுந்தன. அதற்கு முன்பு இந்த சட்ட நுணுக்கப் பணிகளுக்கான விதிமுறைகள் இயற்றப்படவில்லை. அதனால், மனுநீதி போன்ற பழைய நூல்களிலிருந்து சிவில், கிரிமினல் விவகாரம் பற்றிய விதிமுறைகள் சென்ற கலை முறையிலே தொகுக்கப்பட்டு வரையறை செய்யப்பட்டன.

இவ்வாறு தொகுக்கப்பட்டவற்றை நிர்வாகம் செய்ய, நீதி மன்றங்கள். சிறைக்கோட்டங்கள் உருவாகின. அவற்றை வாதிப்பதற்கு வழக்குரைஞர்கள் தோன்றினார்கள். சட்டங்களின் நுணுக்கங்களையும், சிக்கலான தீர்ப்புகளையும் பொதுமக்கள் அறிய வேண்டியது அவசியமாயிற்று. அதனால், மொழி பெயர்ப்பாளர் பணியிலே அமர்த்தப்பட்டவேதநாயகம் அவற்றை எல்லாம் முதன் முதலாகத் தமிழிலே மொழி பெயர்த்து நூல்களாக வெளியிட்டார்.

இவ்வாறு கி.பி. 1806 ஆம் ஆண்டு முதல 1801 ஆம ஆண்டு வரை அதாவது 56 ஆண்டுக்காலம் வரை இலைமறை காய்போல