பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

28 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

அவற்றைப் பார்த்துக் கையொப்பம் இட வேண்டும் என்பதற்காக, அவற்றைத் தம்முடன் எடுத்துக் கொண்டு போனார். சென்ற இடத்திலே அந்த நீதிபதி நோய்வந்து இறந்துவிட்டார்.

தங்களுக்கு அனுப்பப் பட்டிருந்த கலக வழக்குகளின் ஆவணங்களைப் பரிசோதித்து உரிய மொழிபெயர்ப்புக்களை ஏன் அனுப்பவில்லை என்று சதர்ன்கோர்ட்டார். மாவட்ட நீதி மன்றத்தினரைக் கேட்டார்கள்.

அந்த நேரத்தில் மாவட்ட நீதிபதியாக இருந்தவர் மேஸ்தர் கிரீன்வே என்பவராவார். அவர் ஒரு முன் கோபி, அவசரக்காரர். அதனால், நடந்த விவரங்களைச் சரியாக விசாரணை செய்யாமலேயே, ஆவணங்களை அனுப்பாதது வேத நாயகர் தவறு என்றும், அதற்காக அவரை வேலை நீக்கம் செய்துவிட்டோம் என்றும் பதில் எழுதிவிட்டார்.

இதற்குப் பிறகு வேத நாயகர், மேஸ்தர் டேவிட்சன் இறந்த விவரத்தையும், நடந்த மற்ற சம்பவங்களையும் விளக்கி சதர்ன் கோர்ட்டாருக்கு எழுதி தண்டனையிலே இருந்து தன்னை விடுவித்து. மீண்டும் பணியிலே அமர உத்தரவிட வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். பல மாதங்களாகியும் வேதநாயகர் வேண்டுகோள் கவனிக்கப் படாமல் போயிற்று.

வேதநாயகர் இப்போது வேலையை இழந்தார். வேதனை அவரை வாட்டிற்று குத்திருமல் என்ற இருமல் நோய் அவரைப் பற்றித் தொல்லைப் படுத்தியது. நோயோடு போராக் கொண்டிருந்த நேரத்தில் அவரது படுக்கையிலே இருந்த சிறு பாம்பு ஒன்று அவரைத் தீண்டிவிட்டது.

ஒருநாள் அவர் வண்டியில் சவாரி போகும்போது, வண்டி எதிர் பாராமல் குடை சாய்ந்தது இவ்வாறு பட்ட காலிலே படும் கெட்ட

rb

கடியே கெடும் என்பதற்கேற்ப, துன்பத்தின் மேல் துன்பம் அவரைத்