பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 35

நீதிபதி சில குறைபாடுகளைத் தேடிக் கண்டு பிடித்தார். சம்பந்தப்பட்ட பணியாட்களுடன் வேத நாயகரை மாவட்ட நீதி மன்றத்துக்கு வருமாறு அவர் கட்டளையிட்டிருந்தார்.

உடல் நலம் குன்றிய வேதநாயகர், பயணம் செய்ய முடியாத காரணத்தால், பணியாட்களை மட்டுமே மாவட்ட நீதிபதியிடம் அனுப்பி வைத்தார். இதை ஏற்காத நீதிபதி, வேதநாயகரை நேரில் வருமாறு மீண்டும் உத்தரவிட்டார்.

நோய்த் தொல்லை அதிகமாக இருப்பதாலும், பயணம் செய்யும் அளவுக்கு உடல் சீர் கெட்டிருப்பதாலும், மருத்துவர் களிடம் சான்றுச்சீட்டு வாங்கி அதை நீதிபதிக்கு அனுப்பி இருந்தார்.

அதனால், மேலும் கோபமடைந்த நீதிபதி, வேதநாயகத்தைப் பணியை விட்டு நீக்குமாறு உயர்நீதி மன்றத்திற்கு சிபாரிசு செய்தார். அதற்கேற்ப உத்திரவும் வந்தது.

அந்த உத்தரவைப் பெறமறுத்த வேதநாயகர், அதற்கான ஆதாரங்களைக் காட்டி உயர்நீதி மன்றத்துக்கு மனுச்செய்தார். உயர் நீதிமன்ற அதிகாரிகள், வேதநாயகம் மேலதிகாரிகளுக்குக் கீழ்ப் படியாததே பெருங்குற்றம் என்ற காரணத்தைக் காட்டி, வேலையிலே இருந்து ஓய்வு பெறுக என்று வற்புறுத்தவே, வேதநாயகரும் தனது உடல் நலம் காரணமாகச் சரியென்று ஒப்புக் கொண்டார்.

ஆனால், புதிய நீதிபதி நெல்சன், ஓய்வூதியமும் வழங்கக் கூடாது என்று உயர்நீதிமன்றத்திடம் போராடினார், ஆனால் நெல்சன் எண்ணங்களைப் புறக்கணித்து, மாதம் நூறுரூபாய் ஓய்வூதியம் பெற உதவிசெய்தது உயர் நீதி மன்றம்,

அப்போது உத்தியோகஸ்தர்களைப் பற்றி வேதநாயகம் பிள்ளை கூறிய கருத்து என்ன தெரியுமா?