பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/40

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 39

வரும் வழக்கர் மனத்தை

வன் சொற்களால் கெடாமல் மற்றைக் கீழ் உத்தியோகஸ்தர் வம்புக் கிடங் கொடாமல் வரும்படியால் வழக்கு

ஆராய்ச்சியில் பின்னிடாமல் அப்பன் பாட்டன் சொன்னாலும்

அறநெறி கைவிடாமல் தரும் தேவதை ஞாய

தலந்தனில் நடிக்க தப்பு சாட்சிகள் கிடு

கிடெனவே துடிக்க இருமையகல அநீதியே

ஒட்டம் பிடிக்க இலஞ்சம் வாங்கிகள்

வெட்கத்தால் உயிர்மடிக்க நானே பொதுநீதி - தான்ே செலுத்திட

நல்வரம் அருள்கோனே. -என்று, வேதநாயகர், நீதிமன்றத்தில் - தான்் கண்ட சமுதாய விரோதச் சாபக் கேடுகளை மனம் வெதும்பிச் சாடினார். நீதி மன்றங்களிலே இன்று நடைபெறும் அலங்கோலங்கள், அவலக்கேடுகள், அவமானங்கள், அநீதிகள், வேதநாயகர் காலத்தைவிட ஆயிரம் மடங்குகள் அதிகமாகவே நடந்து பொங்கி வழிகின்றன. இருப்பினும், அன்று நடந்ததைக் கண்டே வேதநாயகர் மனம் அரிசி போட்ட உலையைப்போல - கொதித்து