பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/41

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

4籍 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

பொங்கி விட்டார் என்றால், இன்றைய நிலையைக் காணும் அவலம் அவருக்கு ஏற்பட்டிக்குமானால் தற்கொலையே.செய்து கொள்வாரோ என்னமோ!

வேதநாயகர் காலம் கி.பி. 19 ஆம் நூற்றாண்டு இது போலவே கி.பி. மூன்றாம் நூற்றாண்டில் மிருச்சகடிகம் என்ற நூலில் வரும் மன்னன் சூத்திரகன் என்பவனும் கீழ்க் கண்டவாறு, வேதநாயகர் போலவே பேசுகிறான். இதோ அவனுடைய அறம் சார்ந்த பேச்சு 'ஆ நீதிபதிகள், வழக்கு நிலையின் வயப்பட்டு, அதன் சான்று முதலியன எவ்வாறுளவோ, அவ்வாறே வழக்குகளை முடிக்க வேண்டும். தமது அறிவை மாத்திரமே கடைப்பிடித்து, வழக்கின் இயல்புகளைப் பகுத்தறிதல் நீதிபதிகளுக்கு அரிதாகின்றது.

வழக்குரைப் போர், வழக்கின் தன்மையை மறைத்துக் கூறுவார்கள். எல்லோரும் தம்மைக் குற்றமற்றவர் என்றும், காரணம் இல்லாமலே பிறர் கெடுதிகளைச் செய்கின்றனர் என்றும், அதனால், தாங்கள் செய்யும் குற்றங்களை மறைத்தே சொல்லு கின்றனர்.

வசதிகள், பிரதிவாதிகள் இருதரத்தாரும், அவரவர் குற்றங்களை மறைத்து, பிறருடைய தவறுகளை வெளியே நிரூபணமாக்க அவர்கள் செய்யும் ஆராவாரங்களால் உண்மை வெளியே வராமல், பிறரால் உணர இயலாமல் போகின்றது.

ஒழுக்கம் உடையார் எனினும், சாட்சியாய் வருபவர், பார்த்தவற்றைக் மறைத்துப் பார்க்காதவற்றை ஏறுமாறாகக் கூறுகின்றார்கள். தமது கட்சியின் தவறுகளை வெளியே பகிரங்கமாகக் கூறமாட்டார்கள். அதனால், அறங்காண்பவருக்குப் பழிப்பு எளிது புகழ்ச்சி அரிது.

நீதிபதிகளாகப் பணியாற்றுபவர்களுக்கு அறநூல்கள், பொருள் நூல்கள், பற்றிய நுட்ப அறிவு அவசியம் தெரிந்திருக்க வேண்டும்.