பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/46

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 45

அதிகாரிகளின் அதிகார தர்பார்:

உத்தியோகத்தார், பொது மக்கள் ஊழியர், அதிகாரிகள் அல்லர் சேவகர்களே அன்றி, எசமானர்கள் அல்லர் என்று இப்போது நாம் கூறுகின்றோம், பேசுகின்றோம். ஊழல் ஒழிக, லஞ்சம் ஒழிக. என்று ஊருக்கு ஊர் இன்று மேடை போட்டுக் கூவுகின்றோம். ஆனால், அக்கிரமங்கள், அதிகாரக் கொடுமைகள் நம் கண்முன்னே நடக்கின்றன. அதைத் தடுக்க நாம் முற்படு வதில்லை.

அநியாயம் இழைக்கப்பட்ட போதும் அதை நாம் தட்டிக் கேட்பதில்லை. நாம் சுதந்திரர் நம்மைப் போன்றவரல்லர் வேத நாயகம் பிள்ளை, அதிகாரதர்பார் நடந்த அக்காலத்திலே, தயவு தாட்சணியம் இல்லாமல் ஆட்சியை எதிர்த்து எழுதியவர் இவர் ஒருவர்தான்்.

இந்தியாவில் 1885 ஆம் ஆண்டில் இந்திய தேசிய காங்கிரஸ் மகாசபை அப்போது தோன்றவில்லை என்பது குறிப்பிடத்தக்கது மட்டுமல்ல; நெறி தவறிய நீதிபதிகளை நையாண்டி செய்தும், கண்டித்தும் எழுதியும் எச்சரிக்கை செய்தவர் நமது வேத நாயம் பிள்ளை ஒருவரே தான்்.

வரம்பு மீறிய அதிகாரிகளைக் கேலிசெய்து, பரிகாசத்துக் குள்ளாக்கினார். குத்தலாகக் கூறி அவர்கள் நேர்மையைத் தூண்டிட முற்பட்டார், உத்தியோகத்தர்களைக் குறித்து இவர் எழுதிய கேலி, கிண்டல், பரிகாசங்கள் தமிழிலே மிக உயர்ந்த அங்கதங்கள்.

ஆனால், தற்போது இவற்றை யாரும் அறியார். இன்றைய சூழ்நிலையிலே இவற்றை வெளியிடுவதும், விளம்பரப் படுத்துவதும், மிகவும் அவசியமே. இவற்றைப் படிப்பவர் வேதநாயகம் பிள்ளையின் களங்கமற்ற உத்தியோக வாழ்வைப் போற்றாமல் இருக்க மாட்டார்கள்.