பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/54

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 53

பரீட்சையுடன் ஒழுக்கப் பரீட்சையும் செய்யாமல் யாருக்கும் உத்தியோகம் கொடுக்கக் கூடாது.

"ஆங்கிலப் பாடசாலைகளிலே கடவுள் பக்தி,நல்லொழுக்கம் முதலியவை கற்பிக்கப்படுவதில்லை. லெளகிக சம்பந்தமான சில காரியங்களே கற்பிக்கப்படுகின்றன. ஆதலின், மாணவர்கள், உலகாயதர்களாயும், நாத்திகர்களாயும் வளர்கிறார்கள். அவர்களுக்கு உத்தியோகம் ஆனவுடன் பணமே தெய்வம் என்று நினைத்து, அதைச் சம்பாதிப்பதற்காக சகல அக்கிரமங்களையும் செய்கிறார்கள்.

'அறுக்கமாட்டாதவன் இடுப்பிலே ஐம்பத்தெட்டு அரிவாள்' என்பது பழமொழி, ஒரு வேலை கூடப் பார்க்க சக்தி இல்லாதவருக்கு, ரெவின்யூ வேலை, சிவில் விவகார வேலை, மாஜிஸ்டிரேட் வேலை முதலிய பல கொடுக்கப் படுகின்றன. பல சரக்குக் கடைக்காரருக்குப் பயித்தியம் பிடித்தது போல் இவர்கள், ஒரு வேலையையாவது சரியாய்ப் பார்க்காமல், எல்லா வேலைகளையும் குழப்பிக் கொண்டு காலம் போக்குகிறார்கள்.

மேலும், அவரவர் யோக்யதைக்குத் தகுந்த உத்தியோகம் இன்றி, பதவிகள் வழங்கப் படுகின்றன. குறைந்த வேலையுள்ள வர்களுக்கு மிகுந்த சம்பளமும், அதிக வேலையுள்ளவர்களுக்குக் குறைந்த சம்பளமும் கொடுக்கப்படுகின்றன. ஒரு வேலையும் இல்லாமலே சிலருக்கு வகை தொகை இன்றிச் சம்பளங்கள் தரப்படுகின்றன.

வேலியே பயிரை மேய்ந்தால்...!

அதிகாரிகள் பரிதான்த்தை விரும்பாதபடி, அவர்களுக்குப் போதுமானசம்பளங்கள் கொடுக்கப்படுகின்றன. அப்படியிருந்தும் அவர்கள் ஒவ்வொரு வழக்கிலும் உபய வாதிகளிடமும்,