பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/56

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 55

எல்லைக்குள் ஒரூரிலிருந்து மற்றோர் ஊருக்குப் போகும் போது, அக்கம் பக்கங்களிலே உள்ள ஆடு, மாடு முதலிய மிருகங்கள். கோழி, கொக்கு முதலிய பட்சிகள், பட்சணமாய் விடுகின்றன. நூறு புலிகள் புறப்பட்டாலும், அத்தனை உயிர்களை அவ்வளவு விரைவிலே அவை தின்னா.

நவதான்ியங்களும், வைக்கோல் புல் விறகுகளும் - பல கிராமங்களில் இருந்து சுமை சுமையாய் வந்து குவியும். பெரிய துரைக்குப் பயன்பட்டு, எஞ்சிய வற்றைச் சில்லரைத் தேவதைகள் பங்கிட்டுக் கொள்வார்கள்.

அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைக்கும் என்பது பழமொழி. ஒரு அதிகாரிக்கு யார்மீது துவேஷம் இருக்கிறதோ, அவர் கெடுவது என்னமோ நிச்சயம். வழக்கமாய் லஞ்சம் வாங்குகிற அதிகாரிக்கு எவன் லஞ்சம் கொடுக்கவில்லையோ அவன் சன்ம சத்துரு. அவனைக் கழுத்துறுக்க அதிகாரி சமயந்தேடுகிற படியால், லஞ்சங் கொடுத்து அவன் தயவைச் சம்பாதிக்க வழக்காளி உடன்படுகின்றான்.

இலஞ்சம் வாங்குபவர்க்கும் - கொடுப்பவர்க்கும் தண்டனை விதிக்கப் பட்டிருக்கிறது. இலஞ்சம் வாங்குபவர்க்கு, சருவானு கூலமான சட்டம் இதைவிட வேறொன்றிருக்க முடியுமா? அதனால், லஞ்சம் பிராது கொண்டு வர யாரும் துணிகிறதில்லை; துணிந்தாலும், அதிகாரிகளுக்கு விரோதமாய்ச் சாட்சிகள் அகப்படா.

இலஞ்சம் ருசு வாகாவிட்டால், பிராது செய்தவன் தண்டிக்கப் படுவதும் அன்றி, அதிகாரிகள் பகைக்கும் பாத்திரம் ஆகின்றான். இவ்வாறு இலஞ்சம் வாங்குபவர்களுக்குப் பல சாதகங்கள் இருக்கின்றபடியால், அச்சமின்றி அவர்கள் கொள்ளை அடிக்கிறார்கள்.