பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/6

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நாவல் உலகின் தந்தை மாயூரம் வேதநாயகம் பிள்ளை

'இந்து’’ நாளிதழின்

தலையங்கம்

மாயூரம், மாயவரம், மயிலாடுதுறை என்ற பெயர்கள் மாயவரம் நகருக்கு வழங்கி வரும் திருப்பெயர்களாகும்.

'மெட்ராஸ் ஸ்டேட் என்ற பெயருடைய நம் தமிழகத்திற்கு, பேரறிஞர் அண்ணா அவர்கள் 1967 ஆம் ஆண்டில் முதலமைச்சர் ஆனபின்பு, தமிழ் நாடு என்று பெயர் சூட்டியதைப் போல, மாயவரம் தொகுதியிலே இருந்து தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு உறுப்பினராகத் தேர்வு செய்யப்பட்டிருந்த கிட்டப்பா, மாயவரம் மாநகருக்கு மயிலாடுதுறை என்று பெயரிடப் போராடி வெற்றி பெற்றார்:

கர்நாடக மாநிலத்திலே உளள குடகு மலையில் ஆடுதாண்டா காவிரி என்று பெயர் பெற்ற பொன்னியாறு, கர்நாடக மண்ணையும் தமிழகப் பூமியையும் வளமாக்கி வலம் வந்து, இறுதியிலே மாயவரம் நகரருகே வங்கக் கடலில் கலக்கின்ற மாயூரம் இந்த எழிலார்ந்த நகரிலே வேதநாயகம் பிள்ளை மாவட்ட முன்சிஃப்பாகப் பணியாற்றியதால் - அவர், அந்நகர் பெயராலேயே மாயூரம் முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை என்று அழைக்கப்பட்டார்.