பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/65

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

శణీ மாயூரம் வேதநாயகம் பிள்ளை

'சட்ட நூல்கள் ஆங்கிலத்திலே அமைந்து கிடப்பதாலும், சட்ட துணுக்கங்களுக்குரிய சரியான பதங்கள் தமிழிலே, இல்லாமை யாலும், தாங்கள் ஆங்கிலத்தைப் பயன்படுத்துவதாகச் சிலர் சொல்லுகிறார்கள். அது அறியாமையே; உண்மை அல்ல."

'தமிழ் நூல்களைத் தக்கபடி ஆராய்ந்தால், பதங்கள் அகப்படாமற்போகா, இரண்டொரு குழுக்குறிகளுக்குத் தமிழ்ச்சொற்கள் இல்லையென்றால், அவற்றை மட்டும் ஆங்கிலத்திலே வழங்கினால், அவர்களை யார் கோபிக்கப் போகிறார்கள்?

'வக்கீல்கள் ஆங்கிலத்திலே வாதிப்பது அக்கிரமம் என்று, சில தமிழ் நியாயாதிபதிகளுக்குத் தெரிந்திருந்தும் அதைக் கண்டித்தால், தங்களுக்கு ஆங்கிலந்தெரியாதென்று மற்றவர்கள் நினைப்பார்களே என்று ஆங்கில வாதத்துக்கு இடங்கொடுக் கிறார்கள். நடவடிக்கைகளையும் அவர்கள் ஆங்கிலத்திலே நடத்துகிறார்கள்.'

'சில சமயங்களிலே நியாயாதிபதியும் - வக்கீலும் ஆங்கிலத்தை நன்றாகப் படியாதவர்கள் ஆனால், ஒருவர் சொல்லுவது ஒருவருக்குத் தெரியாமல் சண்டையிட்டுச் சங்கடப் படுகிறார்கள். கோர்ட்டுகள் நாடகசாலையாகத் தோன்றுகின்றன.'

'ஒவ்வொரு வாக்கிலும் உண்மையைக் கண்டு பிடித்து, நீதி வழங்குவது கோர்ட்டார் கடமை; தாய்மொழியிலே கோர்ட்டு நடவடிக்கைகள் நடந்தால் மட்டும் உண்மை வெளியாகுமே அன்றி, மக்களுக்குப் புரியாத மொழியிலே நடந்தால், எப்படி உண்மை வெளியாகும்?

'தமிழ் நியாயாதிபதிகள் எல்லா நடவடிக்கைகளையும் ஆங்கிலத்திலே நடத்தும் படி சட்டம் இல்லை. தீர்ப்பை மட்டும் ஆங்கிலத்திலே எழுதலாம். அப்படியிருக்கத் தமிழ் நியாயாதி