பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/67

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

8. தமிழ் இலக்கிய மும்மூர்த்திகள்!

LCகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை நூற்றுக் கணக்காக அல்ல. ஆயிரக் கணக்காகவுமல்ல; ஏறக்குறைய இலட்சங் களுக்கும் மேற்பட்ட 22 புராணநூல்களையும், 42 பிரபந்தங் களையும், ஆறுகாப்பியங்களையும், எண்ணிலடங்கா தனிப்பாடல் பாக்களையும் பாடிய மாபெரும் கவிராட்சசன் தனது மூளையிலே முத்தமிழ்ச் சொற்களைக் குடிபுக விட்டவர் அவரை மாபெரும் கவிதைப் பெருங்கடல் என்று கூறுவர் தமிழறிந்த சான்றோர்.

ఔ ஆனிமாத வாக்கில், மாயூரம் வேதநாயகம் பிள்ளையைப் பார்க்கச் சென்றிருந்தார். அப்போது வேதநாயகர் செய்தித் தாளைக் கூர்ந்து படித்துக் கொண்டிருந்தார்.

அத்தகைய கவிதைப் பெருவேந்தர் கி.பி.1852 ஆம் ஆண்டு

மகாவித்துவான் பிள்ளை வருவதைக் கண்ட வேதநாயகர், அவரை வரவேற்று, பத்திரிக்கையிலே நான் இப்போது வாசித்துக் கொண்டிருக்கும் செய்தி தங்களைப் பற்றியதுதான்் என்று கூறி, அதைப் படித்தும் காட்டினார். அதாவது:

தமிழுக்குத் தற்போது துண்களாக விளங்குபவர் இருவர்; ஒருவர் வசனம் வரைவதிலே வல்லவர் மற்றவர் செய்யுள் புனைவதிலே சிறந்தவர். முன்னவர் யாழ்ப்பாணம் ஆறுமுக நாவலர், பின்னவர் மகாவித்துவான் மீனாட்சி சுந்தரம் பிள்ளை.