பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/71

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

76 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

ரும்புகிறவர் அல்லரே வேதநாயகர். ஆதலின், வேதநாயர் பெற்றுள்ள பெரும்புகழை வியந்து, மகாவித்வான் 438 பாடல்களால் ஐந்திணைக் கோவை என்ற ஒரு கோவை நூலை, 1853 ஆம் ஆண்டில் எழுதினார். இந்தக் கோவை பிற்காலத்தில் குனத்துர்க்கோவை என்று பெயர்பெற்றது. அக்கோவையிலே ஒரு கனி இது - சுவைக்க

"எறியுங் கலிதன் தலைசாய்த்திடத் தமிழின் அருமை அறியும் புருட மணிவேத நாயகம் அண் ணல்வெற்பில் செறியும் படிநம் இருபேரையும் இன்று சேர்த்த தெய்வம் முறியும் படிஇடையேசெய்யு மோசற்று முன்னலையே."

-புருஷருள் மணி போன்றவர் வேதநாயகர் தமிழருமை அறிந்தவர் எங்கள் நட்பிலே இடையூறு இல்லை; எங்களைச் சேர்த்த தெய்வம் இனிப் பிரிக்காது; இன்று போலவே என்றும் இருப்போம்." என்று மகாவித்துவான் வேத நாயகர் நட்பைப் பெற்று எக்களித்துப் பாடியுள்ளார். இப்பாடல் அகப்பொருள் துறையிலே தெய்வத் திறம் பேசல் என்ற இலக்கணத்திற்கு எடுத்துக் காட்டாக அமைந்துள்ளது.

கி.பி. 1857 ஆம் ஆண்டில் தரங்கம் பாடியிலே முன்சிஃப் பதவி ஏற்ற வேதநாயகர், பிறகு சீர்காழிக்கு மாற்றப்பட்டார். அப்போது, மகாவித்துவானை தன்னுடன் தங்கியிருக்குமாறு கேட்டுக் கொண்டார். அப்போதுதான்் வேதநாயகர் நீதி நூல் என்ற ஒரு திரட்டை வெளியிட்டார். அந்த நூல் முழுவதையும் படித்த மகாவித்துவான் மகிழ்ச்சி பெற்று அந்நூலுக்கோர் சிறப்புப் பாயிரம் தந்தார்.

அப்போது சீகாழிப் பிரமுகர்கள் ஒன்று கூடி வேதநாயகரைச் சந்தித்து, சீகாழி சிவபெருமான மீது ஒரு காழிக்கோவை பாடும் படிகேட்டுக் கொண்டார்கள் ஏனென்றால், வேதநாயகர் மீது