பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/72

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 71

பாடப்பட்ட குளத்துர் கோவையைப் படித்து ரசித்துச் சுவைத்த இலக்கிய ருசி. அதனால், மகாவித்துவானிடம் நேரிற் கேட்க அச்சப்பட்டு வேதநாயகம் மூலமாக வேண்டு கோள் விடுத்தார்கள்.

வேத நாயகம் பிள்ளையும், சீகாழி பக்தர்களும் கேட்டுக் கொண்டதற்கு ஏற்றவாறு மகாவித்துவான், நாளொன்றுக்கு பத்துப், பதினைந்து பாடல்கள் வீதம் பாடி, வேதநாயகரிடம் அதைப் பாடிக் காட்டி சீர்காழிக் கோவை என்ற நூலை பாடி முடித்தார். இந்த நூல், சீர்காழி சிவன் கோயில் தெற்குப் பிரகாரத்திலுள்ள வலம்புரி மண்டபத்திலே முன்சிஃப் வேதநாயகம் பிள்ளை தலமையில் அரங்கேறியது.

அரங்கேற்றத்தில் வழக்கம் போல அழுக்காறுகள் உருண்டு திரண்டு வம்படி வழக்காடின. எவ்வளவோ சமாதனம் கூறியும் வம்பர்கள் வாயடங்க வில்லை. இவர்களின் விதண்ட்ாவாத பொறாமை வினாக்களைக் கண்டு வேதநாயகர் மனம் நொந்து முடிந்தவரை அமைதிப் படுத்த அரும்பாடு பட்டும் முடியாமல் போகவே, தனது சேவகர்களை ஏவி அந்தத் தமிழ் அகம்பாவி களை வெளியேற்றினார்.

அதற்குப் பிறகு சீகாழி சிவபெருமானைப் பார்த்து வேத நாயகர் ஒரு கேள்வி கேட்டார். என்ன கேள்வி அது என்கிறீர்களா? இதோ அது

'விதி எதிரில் அரிமுதலோர் புகல் புகலி ஈசரே!

விண்ணோர் மண்ணோர் துதிபொதுபல் பாமாலை பெற்றிருப்பீர் மீனாட்சி

சுந்தரப் பேர் மதிமுதியன் கோவையைப் போல் பெற்றீர் சொல்!

இக்காழி வைப்பின் நீதி