பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/80

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 79

தோன்றுகின்றான், சுடுகின்றான்; அடுத்தோரை மதி, சந்திரனை அழிக்கின்றான். அத்தமிக்கின்றான் ஆனால், ஞான பானுவாகிய தாங்களோ மேல் திசையிலே தோன்றுகின்றீர்கள், யாவர்க்கும் நிழலாக நிற்கின்றீர்கள் அடைந்தவர் மதியை அறிவை விரிவாக்குகின்றீர்கள், ஞானக் கடலிலே மூழ்குகின்றீர்கள். அத்தமனம் என்பது எந்நாளும் தங்களுக்கு இல்லை.

வேதநாயகரின் பாடலுக்கு திருவாவடுதுறை ஆதீனம் ஒரு வெண்பாவிலே விடை கூறிய பாடல் இது;

"இந்துவினை நோக்கும் எழிற்கை ரவம் ஏக தந்துவினை நோக்கும் சமயிமனம் - முந்துலகில் நன்றமையும் நீதிநல வேத நாயகமால் உன்றனையே நோக்கும் உளம்”

குமுத மலர் சந்திரனையே நோக்கும், சமய குரவர் மனம் ஞான நூலையே நோக்கும்; அதுபோல வேத நாயக தங்களையேபற்றி நிற்கிறது எமது மனம் என்ற பொருளுடைய வெண்பாதான்் மேலே உள்ளது.

-கேள்வியும் - பதிலுமான இந்த இருவர் கவிதைகளையும் கேட்டுக்கொண்டிருந்த மகாவித்துவான் சும்மா இருப்பாரா? இருவருடைய பாக்களையும் ஊடுருவி எது எத்தகையது என்பதை ஆய்வு காண்கிறார். முதன்மை வாய்ந்த தேசிக முனிவரே. குளத்துர்வேத நாயகம் ஒரு கார்மேகம், அது பொழியும் கவிமழை முன்பு பாடவல்ல பாவாணர் பாவினங்களே தலைதுக்கா, தங்கள் புகழ்முன் ஏனையோர் புகழ் எம்மாத்திரம்? அதுபோல

'குடு புகக்மலி திருவாவடுதுறைச் சுப்பிரமணிய

குரவர் ஏறே! பீடு மலிவளங் குளந்தை வேதநாயக மேகம்

பெய்யும் பாமுன்