பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/81

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

38 மாயூரம் வேதநாயகம் பிள்ளை

பாடுதிறலாளர் பா, உயிர்முன் குற்றியலுகரம்

படும்பா டெய்தும் நீடுதிறல் நின்புகழ்முன் ஏனையோர் புகழ்போலாம்

நிகழ்த்தல் என்னே!" இவ்வாறு, ஏற்றத் தாழ்வின்றி, மகாவித்துவான் இருவரையும் இரு கண்ணாகப் போற்றிக் கொண்டாடினார். உயிர்முன் குற்றியலுகரம் படும்பாடெய்தும் என்ற எடுத்துக் காட்டு இருவர் நட்பையும் எண்ணிப் பார்த்து மகிழ வேண்டியதாகும்.

நாடு + அழகிது = நாடழகிது என்பதிலேயான நாடு என்ற சொல்லிலுள்ள டு என்ற உயிர்மெய் எழுத்திலே உள்ள 'உ' என்ற உகர உயிர் ஈறு உள்ள நிலைமொழி ஓடிவிடுகிறது அல்லவா? அது போலக் கவிஞர்கள் ஒடுவர் என்பதை வலியுறுத்திக் கூறுகிறார் மகாவித்துவான்.

ஞான தேசிகர் மீண்டும் வேத நாயகரைச் சந்திக்க ஆர்வம் கொண்டார். அதற்காக பண்டார சந்நிதியார் தனது வண்டியையே அனுப்பிவைத்தார். மறுநாள் வெள்ளிக் கிழமை, மேற்கே சூலம், எனவே, சனியன்று காலையிலே திருவாவடுதுறைக்கு வருவதாக ஒரு கவிதையைத் தூது அனுப்பினார்.

'போதமுறுசுப் பிரமணிய புனித நின்பால் வருவதற்கு வேதவியாழன் ஆகாதாம்; வெள்ளி மேற்கே சூலமாம் ஆதலாலே, திரவாரம் அருணோதயம் ஊர் ஆவலுடன் சீதமலரை நாடிவரும் தேன்போல் வருவேன் திரமிதுவே. துது அனுப்பியதற்கு ஏற்றபடிசனிக்கிழமை காலையில், மலரை நாடும் வண்டுபோல மகா சந்நிதான்த்தைச் சென்று தரிசனம் செய்தார். மழையைப் பார்க்கும் பசும்பயிர் போல, தாய் முகம்