பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/82

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 84

நோக்கும் குழந்தைபோல அவரைத் தரிசிக்கக் கருதும் அடியார் தவிப்பு எம்மாத்திரம் என்கிறார்.

அதற்கு அவர் காரணம் காட்டும் போது, தேசிகர் கல்லாத கலை இல்லை; அனைத்தையும் அவர் அறிவாராம்; எனவே, அவரைப் புகழாத புலவர் இல்லை; அவர் குணக்குன்று அவரைப் பாராட்டாத மன்னர்கள் இல்லையாம் அதை அவர் தனது கவிதையில்:

“நீர் நாடு வளத்திருவாவடுதுறைச்சுப் பிரமணிய நிமல்:

கேண்மோ கார்நாடும் பைங்கூழ் போல், கதிநாடு தொண்டர்கள்

போல்கமழா நின்ற தார்நாடும் மதுகரம்போல் தாய்நாடு சேயினைப் போல்

தயையின் மிக்க சீர்நாடும் நின் சமுகம் நேர்நாடி வந்தனன் யான் தெரிந்து

கொள்ளே”

'நல்லார்தம் இதயமலர் தனில்வளர் சுப்பிரமணிய

நல்லோய்! நீதான்் கல்லாத நூல்இல்லை; நீ காணாத பொருள் இல்லை;

பல்கவிஞர் நின்மேல் சொல்லா பா இல்லை! நின்றுதியாத மன்னரிலை; தூய

நின்கண் இல்லாத குணம்இல்லை; ஆயிரநா ஆனாலும் உன்சீர்

- இயம்பல் பாற்றோ அன்றுகண் டனம்நினை; அதனினம் இனிதமைந்தது இன்றுகண் டனம் ஆதலின், அஃது இருங்கழை நுனியே நன்று நீபுரி நீதியின், நயந்துமே நாளும்