பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/90

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி 89

போகத் தக்கவை. உரையாடலுக்கும் உலக வியாபாரங்களுக்கும் உபயோகமில்லாத அந்த மொழிகளைப் பிரயாசை எடுத்துப் படித்தும் பிரயோசனம் என்ன? அவை அழகும், அலங்காரமும் பொருந்திய மொழிகள் என்பதிலே சந்தேகமில்லை.

அவகாசம் உள்ளவர்கள் தாய் மொழியுடன் அவற்றைப் படிப்பது; அதிக விசேடந்தான்். ஆனால் சொந்த மொழியை நன்றாகப் படிக்காமல், அயல் மொழிகளிலே காலம் எல்லாம் போக்குவது கூடாது.

ஆங்கிலம் விரோதமல்ல

ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய அரசாங்க மொழிகளைப் படிக்க வேண்டாம் என்று நாம் விலக்கவில்லை. ஏனென்றால், நாம் நடத்த வேண்டிய சட்டங்களும் ஒழுங்குகளும், நியாயப் பிரமாணங் களும், அவற்றிலே இருக்கிற படியால், அவை தெரியாவிட்டால் அந்த ராசாங்கத்தை நாம் எப்படி நிர்வகிக்கக் டும்?

சன்மார்க் கங்களைப் பற்றியும், உலகத்துக்கு மிகவும் உபயோகமான பலவிஷயங்களைப் பற்றியும், அந்த ராச மொழி களிலே அநேக அருமையான கிரந்தங்கள் இருக்கிறபடியால், அவைகளைப் படிக்கப் படிக்க, அறிவு விசாலிக்கும் என்பது திண்ணமே. ஆனால், மாதா வயிறெரிய மகேசுவர பூசை செய்வதுபோல, சொந்த மொழிகளைச் சுத்தமாக விட்டு விட்டு, ராச மொழிகளை மட்டும் படிப்பது அநுசிதம் அல்லவா?

அநேகர், தங்கள் தாய் மொழியிலே கையெழுத்துக்களைக் கூடப் பிழையில்லாமல் எழுத அசக்தர்களாய் இருக்கிறார்கள். சிலர், தமிழ் தெரியாமல் இருப்பது, தங்களுக்குக் கெளரவமாகவும் கருதுகிறார்கள் - தாய்மொழி ஞானம் தங்களுக்கு எவ்வளவு குறைவாய் இருக்கிறதோ அவ்வளவு ராச மொழியில், தங்களைச்