பக்கம்:மாயூரம் வேதநாயகம் பிள்ளை.pdf/91

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இத் மாயூரம் வேதநாயகம் பிள்ளை

சமர்த்தர்கள் என்று சகலரும் எண்ணுவார்கள் என்று நினைத்துத்

மிழை அலட்சியம் செய்கிறார்கள்.

தமிழ்ப் புத்தகங்களை அவர்கள் கையிலே தொடுகிறதாய் இருந்தால், பாம்பின் புற்றுக்குள்ளே கையை விடுவது

போலிருக்கும். தமிழ் பேசுவது வேப்பிலைக் கஷாயங் குடிப்பது போலிருக்கும். தமிழ் வார்த்தைகளைக் கேட்பது கர்ணகடோர மாயிருக்கும். அவர்கள் தமிழ் பேசினாலும், முக்காற் பங்கு ஆங்கிலமும் காற்பங்குத் தமிழுமாகக் கலந்து பேசுகிறார்கள். அவர்களுக்குத் தேசாபிமானமும் இல்லை; மொழியபிமானமும் இல்லை

ஐரோப்பியர் தங்கள் சொந்த மொழிகளை எவ்வளவோ பெருமையாகப் போற்றி வருகிறார்கள் என்பதை இவர்களே அறிவார்கள். இவர்கள் மட்டும் தங்கள் தாய்மொழியாகிய தமிழையும் தமிழ் வித்துவான்களையும் அவமதிக்கலாமா? தமிழ் நூல்களையே பாராத இவர்கள், அவைகளுக்கு எப்படிப் பழுது சொல்லக் கூடும்? திருவள்ளுவருடைய குறளை அவர்கள் எப்போதாவது பார்த்திருப்பார்களா? கம்பனுடைய கற்பனையைக் கனவிலும் கேட்டிருப்பார்களா? நாலடியார் செய்தவர்களுடைய காலடியையாவது கண்டிருப்பார்களா? ஒளவையாருடைய நீதி நூலைச் செவ்வையாக அறிவார்களா? அதிவீரராக பாண்டியனை அணுவளவும் அறிவார்களா?

ஆங்கிலம், பிரெஞ்சு முதலிய மொழிகளைப் போலத் தமிழிலே வசன காவியங்கள் இல்லாமல் இருப்பது பெருங்குறை என்பதை நாம் ஒப்புக் கொள்கிறோம். அந்தக் குறையைப் பரிகரிப்பதற்காகத் தான்் எல்லோரும் ராச மொழிகளும். தமிழும் கலந்து படிக்க வேண்டு மென்று விரும்புகிறோம். தமிழைப் படிக்காமல்