பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/102

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

84

மாயா விநோதப் பரதேசி

இருக்கிறது. என் தமயனார் சிறைச்சாலையில் இருக்கிறார் என்றே நான் இந்த கூடிணம் வரையில் எண்ணிக் கொண்டிருந்தேன். இப்போது தாங்கள் சொல்வதைக் கேட்கவே, அவர் அங்கே இருந்து தப்பி ஓடிப்போய் விட்டதாக நான் அர்த்தம் செய்து கொள்ள வேண்டி இருக்கிறது. இது என்னால் தாங்க முடியாத மகா புதுமையான சங்கதியாகவே இருக்கிறது. அவர் என்றைய தினம் தப்பித்துப் போனார்? அப்போது அவரோடு வார்டர்கள் யாரும் இல்லையா? தஞ்சாவூர் ஜெயில் என்ன சாதாரணமான கட்டிடமா? அவ் விடத்தில் காவல் இல்லையா? என் தமையனார் என்ன யெளவனப் பிராயத்து விடபுருஷரா? அத்தனை மனிதர்களையும் அவர் ஏமாற்றிவிட்டு எப்படிப் போனார் என்பது விளங்கவில்லையே!” என்றான்.

இன்ஸ்பெக்டர் சிறிது கோபமாகப் பேசத்தொடங்கி, “ஐயா! நீர் இன்னமும் இந்த மாதிரியே பேசிக் கொண்டு போனால், பிறகு நான் சட்டப்படி நடக்க வேண்டியதாகவே முடியும். அநாவசியமான துன்பத்தை ஏன் விலைக்கு வாங்கிக் கொள்ளுகிறீர்? உம்முடைய சிறுபிள்ளை விளையாட்டெல்லாம் இந்த வெள்ளைக்காரர் துரைத்தனத்தில் செல்லப் போகிறதில்லை. ஒருவர் ஜெயிலில் இருப்பதற்குப் பதிலாக இப்போது பலர் ஒன்றாகச் சேர்ந்து அங்கே போகும்படியான காரியத்தைச் செய்து கொண்டிருக்கிறீர்கள், வேண்டாம். நான் கிளிப்பிள்ளைக்குச் சொல்வதைப் போல, ஒரு தடவைக்குப் பத்துத் தடவையாகச் சொல்லுகிறேன். சிறு பிள்ளைத் தனத்தினால், வீண் பிடிவாதம் செய்யாதேயும்” என்றார். மாசிலாமணி, “சுவாமிகளே! நான் எவ்வளவு தூரம் சொன்னாலும், அது தங்களுக்கு நம்பிக்கைப்படமாட்டேன் என்கிறதே. இனி நான் உங்கள் மனம் திருப்தி அடையும்படி வேறு எந்த விதமாகச் சொல்லப் போகிறேன்? மறுபடியும் திருப்பித்திருப்பி, எனக்கு யாதொரு தகவலும் தெரியாது என்பதைத் தவிர வேறு என்ன சொல்வது என்பது என் மனசுக்குப் புலப்படவில்லை. முன்பு எனக்கு நேர்ந்த தண்டனையாவது, நான் நிஜமாகவே செய்த குற்றத்திற்காகக் கிடைத்தது. இப்போது கால வித்தியாசத்தால் மறுபடி எனக்கு ஏதாவது எதிர்பார்க்காத துன்பம் நேருமானால், அதையும் நான்