பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/104

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

86

மாயா விநோதப் பரதேசி

தூஷிக்கிறார்கள். உண்மையாகவும் நாணயமாகவும் பாடுபடு, தங்களைப் போன்ற மேல் உத்தியோகஸ்தர்களுடைய பெயரும் அகாரணமாய் கெட்டுப் போகும்படி இவர்கள் செய்துவிடுகிறார்கள். இந்த ஜெவான்கள் எல்லோரும் ஒவ்வொரு நாளும் வந்து என்னோடு கூடவே நெடுநேரம் இருந்து, பலவகையில் தங்களுடைய ஆசைகளைப் பூர்த்தி செய்து கொண்டு, என்மேல் யாதொரு சந்தேகத்திற்கும் இடமில்லை என்று நேருக்குநேர் சொல்லிவிட்டுப் போயிருக்கிறார்கள். உண்மையில் இவர்கள் எனக்குத் தெரியாமல் எனக்கு விரோதமான சங்கதிகளை எழுதி இருப்பதாகத் தெரிகிறது. நான் என் வீட்டின் மேல் உப்பரிகைகள் வைத்துக் கட்டினால் அதில் என்ன சந்தேகம் இருக்கிறது? இப்படியானால் மனிதர் சாப்பிடுவது, துங்குவது, நடப்பது முதலிய சர்வ சாதாரணமான காரியங்களைப் பற்றியும் இவர்கள் சந்தேகங்கொள்வார்கள் போல் இருக்கிறதே! ஆம், அதிருக்கட்டும். நான் உப்பரிகை கட்டியதைப் பற்றி, என்ன விதமான சம்சயம் கொள்கிறார்களாம்? அதை எழுதி இருக்கிறார்களா? ஒருவேளை இப்படி இருக்கலாம். சந்தேகம் ஒன்றுமில்லை என்று எழுதினால், இவர்கள் இங்கே அடிக்கடி வர ஏதுவில்லாமல் போய்விடும் என்ற எண்ணத்தினால் அப்படி எழுதி இருக்கலாம். இவர்களுக்கு வயிறு இருக்கிறதல்லவா. இவர்களும் பிழைக்க வேண்டாமா? சர்க்காரார் கொடுக்கும் சொற்ப சம்பளம் எந்த மூலைக்குக் காணப்போகிறது!” என்று நிதானமாகக் கூறினான்.

அதைக் கேட்ட போலீஸ் இன்ஸ்பெக்டர் நிரம்பவும் கோபம் கொண்டவராய், “ஓய் !மாசிலாமணிப் பிள்ளை! பார்த்திரா, நீர் மறுபடியும் உம்முடைய சிறுபிள்ளைத் தனத்தையே காட்டுகிறீரே.! ஜெயிலுக்குப் போய்விட்டு வந்தபிறகு ஏதோ புத்திசாலியாகிவிட்டேன் என்று கொஞ்ச நேரத்துக்கு முன் சொன்னீரே! அதை மறுநிமிஷத்திலேயே பொய்யாக்கிவிட்டீரே! எனக் கெதிரிலேயே போலிஸ் இலாகா சிப்பந்திகளைப் பற்றி அவதூறாகப் பேச ஆரம்பித்து விட்டீரே. லஞ்சம் கொடுப்பது என்றால், வாங்குகிறவர் பேரில் மாத்திரம்தான் குற்றம் என்று நினைத்துக் கொண்டீரா? வாங்குகிறவரைக் காட்டிலும் கொடுக்கிறவர் பேரில்தான் அதிக தவறு இருக்கிறது. போலீஸ்