பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/115

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

97

பாடு திண்டாட்டமே. இதை எல்லாம் தாங்கள் கொஞ்சம் யோசித்துப் பார்க்க வேண்டும். அவர் சிறைச்சாலையிலேயே இன்னம் 8 வருஷம் இருப்பது எனக்கு அநுகூலமா, அல்லது, அவர் இங்கே வருவது அநுகூலமா என்பதை யோசித்துப் பாருங்கள். அவரை விடுவிப்பதில் நான் எள் அளவும் சம்பந்தப்படவில்லை என்பது இப்போதாவது தங்கள் மனசில் படும் என்று நினைக்கிறேன். நான் இப்போது இன்னொரு காரியம் செய்ய உத்தேசித்திருக்கிறேன். என் அண்ணனைப் பிடித்துத் தருபவருக்கு சர்க்காரில் 5000 ரூபாய் கொடுக்கிறதாக விளம்பரம் செய்திருக்கிறார்கள் அல்லவா. அப்படிப் பட்டவருக்கு நானும் ஒரு பதினாயிரம் ரூபாய் சன்மானம் கொடுக்கிறேன். எப்படி யாவது ஜனங்கள் முயற்சி செய்து அவரைப் பிடித்து மறுபடி சிறைச்சாலையில் அடைத்து விடட்டும். எனக்கு இரட்டிப்பு சந்தோஷம். ஆனால், என் அந்தரங்க எண்ணத்தை எஜமானரிடம் மாத்திரம் வெளியிட்டுவிட்டேன். இதைத் தாங்கள் வெளியிடக் கூடாது. சன்மான விஷயத்தை மாத்திரம் நானே பத்திரிகையில் வெளியிட்டுவிடுகிறேன்” என்றான்.

அதைக் கேட்ட இன்ஸ்பெக்டர் ஒருவித வியப்படைந்து, அவன் கூறியது உண்மையாக இருக்குமோ அல்லது கபடமான வார்த்தையோ என்று சிறிதளவு சந்தேகித்து, “ஓகோ! அப்படியா! நீர் சொல்வது உண்மைதானா? உம்முடைய தமையனார் சிறைச் சாலையிலேயே இருக்கவேண்டும் என்று நீர் மனப்பூர்வமாகவே ஆசைப்படுகிறீரா? என்றார்.

மாசிலாமணி, “அதில்கூட சந்தேகமா? அதை நீங்களே யோசித்துப் பார்த்துக் கொண்டாலே தெரியுமே; எவனாவது ஓர் அபார சம்பத்துக்குத் தானே சுயேச்சாதிபதியாக இருக்கப் பிரியப்படுவானா, அல்லது, வேறொருவருக்கு அடிமை போல இருந்து தனக்கு நேரும் ஒவ்வொரு செலவுக்கும் அவரிடம் பணம் கேட்டுக் கொண்டிருப்பதை நாடுவானா?” என்றான்.

போலிஸ் இன்ஸ்பெக்டர், “சரி நீர் இவ்வளவு தூரம் உண்மையைச் சொன்னபிறகு, இன்னமும், நாம் உம்மைப்பற்றி சந்தேகமான எண்ணங்கொள்வது ஒழுங்கல்ல. உம்முடையமா.வி.ப.I-8