பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/118

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

100

மாயா விநோதப் பரதேசி

முன்பக்கத்திலும், பின் பக்கத்திலும் நிற்க வைக்கப் பட்டிருந்த நான்கு ஜெவான்களையும் அழைத்துக் கொண்டு, வெளியில் நின்ற மோட்டார் வண்டியில் ஏறி உடனே பின்பக்கத் தெருவை நோக்கி விரைவாகச் சென்றுவிட்டார்.

அதன் பிறகு ஒரு நாழிகை அவகாசம் கழிந்தது. தனது மாளிகையில் இருந்த மாசிலாமணி மறுபடியும் பின்புறத் தோட்டத்தை அடைந்து, மதில் பக்கம் நோக்கினான். அவ்விடத்தில் நிற்க வைக்கப்பட்டிருந்த ஜெவான்கள் இருவரும் காணப்படவில்லை. அது அவனது மனதில் ஒருவித ஆச்சரியத்தை விளைவித்தது. ஆனால் அவன் அடுத்த கூடினத்தில் தனக்குள் ஒருவித சமாதானம் செய்து கொண்டான். போலீஸ் இன்ஸ்பெக்டர் மதிலுக்கு அப்பால் இருந்த வீட்டைச் சோதனை செய்து பார்த்துவிட்டு, ஜெவான்களை மதிலின் வழியாக அப்புறத்திற்கு அழைத்துக் கொண்டு போயிருக்கலாம் என்ற எண்ணம் அவனது மனதில் உதித்தது. அவன் உடனே தோட்டத்திற்குள் போய் மதிலண்டை நெருங்கி, அவ்விடத்திலிருந்த கொய்யாமரத்தின் மேலேறி அப்பால் நோக்கினான். அப்புறத்தில் மனிதர் எவரும் காணப்படவில்லை. உடனே மாசிலாமணி அவ்விடத்தை விட்டுத் தனது மாளிகையை அடைந்து முன்வாசல் பின்வாசல் ஆகிய இரண்டின் கதவுகளையும் மூடி உட்புறத்தில் தாளிட்டுக் கொண்டு முதல் கட்டில் இருந்தபடி, மேன்மாடத்தில் ஏறி அதன் கூடத்தில் ஊஞ்சற் பலகை போல, சங்கிலிகளால் தொங்கவிடப்பட்டிருந்த ஒரு சப்பிர மஞ்சத்தில் உட்கார்ந்து அதன்மேல் தலையணைகளில் உல்லாசமாகச் சாய்ந்து கொண்டு, சிறிது தூரத்திற்கப்பால் இருந்த உத்திரத்திற்கும் சங்கிலிக்குமாய்ப் பிணைக்கப்பட்டிருந்த ஒரு மணிக்கயிற்றின் நுனியை அவிழ்த்துக் கையில் பிடித்து இழுக்கத் தொடங்கினான். உடனே அந்தத் தொட்டில் மஞ்சம், மனிதர் நின்று ஆட்டிவிடுவது போல அங்கும் இங்கும் போய்வந்து, ஊஞ்சல் போல ஆடத் தொடங்கியது. அவ்வாறு அவன் ஆனந்தமாகச் சாய்ந்து ஆடிக்கொண்டு சந்தோஷமாக இருக்க, மஞ்சத்தின் சங்கிலிகள் மேலே இருந்த நாகபாசங்களில் உராய்வதால் ஏற்பட்ட ஓசை கீச்சு மூச்சென்று பலமாக