பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/119

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

வடுவூர் கே. துரைசாமி ஐயங்கார்

101

உண்டாக்கிக் கொண்டிருந்தது. அவ்வாறு கால் நாழிகை காலம் கழிந்திருக்கலாம். பக்கத்தில் இருந்த சுவரில் ஓர் ஆள் உயரத்திற்கு மேல், வெளிச்சத்திற்காக மூன்றடி சதுரத்தில் விடப்பட்டிருந்த திறப்பை மறைத்துக் கொண்டிருந்த பச்சைக் கண்ணாடிக் கதவு திறந்து கொண்டது. அடுத்த நிமிஷத்தில் ஒரு மனிதன் அந்தத் திறப்பின் வழியாகத் தனது சரீரத்தை உள்ளே நுழைத்துப் பின்புறமாகத் திரும்பி உள்பக்கத்தில் பொத்தென்று குதித்து எழுந்து நின்றான். திறப்பின் கண்ணாடிக் கதவு தானாகவே மூடிக்கொண்டது. அவ்வாறு தோன்றிய மனிதன் மாசிலாமணி உட்கார்ந்து ஆடிக்கொண்டிருந்த மஞ்சத்தருகில் சுவரோரமாகப் போடப்பட்டிருந்த ஒரு விசிப்பலகையண்டை வந்து அதன் மேல் உட்கார்ந்து கொண்டான். உடனே மாசிலாமணி மஞ்சம் ஆடாம்ல் நிறுத்திவிட்டு விசிப்பலகையில் உட்கார்ந்தவனை நோக்கிப் புன்னகை செய்து, “என்ன சேர்வைகாரரே! நீர் வந்து நிரம்பவும் நேரமாகிறதோ?” என்றான்.

இடும்பன் சேர்வைகாரன்:- இல்லை எசுமானே! நான் வந்து கால் நாழிகை நேரந்தான் இருக்கும். செந்தலைப் பூச்சிகள் இங்கே வந்து விட்டுப் போனதாகச் சொல்லிக் கொண்டிருந்தார்கள். அதைக் கேட்டுக் கொண்டிருந்தேன். அதற்குள் நீங்கள் மஞ்சத்தில் ஆடிய சத்தம் கேட்டது. நீங்கள் என்னோடு பேச ஆயத்தமாய் இருப்பதாக நிச்சயித்துக் கொண்டு மேலே ஏறிவந்தேன். இங்கே ஏதாவது விசேஷம் உண்டா? — என்றான்.

மாசிலாமணி சந்தோஷமாகப் புன்னகை செய்து, “இங்கே வேறே என்ன விசேஷம் நடக்கப்போகிறது! இந்தப் போலிஸ் நாய்கள் வந்து குலைத்துவிட்டுப் போகும் என்று நாம் எதிர்பார்த்தது தானே; அப்படித்தான் நடந்தது. நம்முடைய வெண்ணெய் வெட்டி சிப்பாயி அண்ணாவையங்கார் இருக்கிறான் அல்லவா, அவன் தான் வந்து உப்பில்லாமல் கலக்கஞ்சி குடித்துவிடுவதாக ஆடம்பரம் செய்துவிட்டுப் போனான். இந்த வீட்டை எல்லாம் பார்த்தான்; பின்பக்கத்து வீட்டையும், மற்ற வீடுகளையும் சோதனை போடுவதாகச் சொல்லிவிட்டுப் போய்விட்டான். வீட்டுக்கு எதிரிலும்,