பக்கம்:மாய வினோதப் பரதேசி 1.pdf/128

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

110

மாயா விநோதப் பரதேசி

வேற்றுமையே இருக்கக் கூடாது. நம்முடைய மகரிஷிகள் எல்லாம் காட்டில் தவம் செய்யும் போது, சிங்கம், புலி, பாம்பு முதலியவை அவர்களோடு வேற்றுமை இன்றிப் பழகி அவர்களுக்கு யாதொரு திங்கும் செய்யாமல் பக்கத்திலேயே இருக்கும் என்று சொல்லுவார்களே! அதுபோல, அவன் நல்லவர்களாக இருந்தாலும் கெட்டவர்களாக இருந்தாலும், எல்லோரையும் சமமாக பாவித்து, அன்பென்ற மருந்தினால் கெட்டவனையும் நல்வழிக்குத் திருப்ப முயல வேண்டும். அது முடியாவிட்டால், தன் ஜோலியைப் பார்த்துக் கொண்டு சும்மா இருந்துவிட வேண்டும். அப்படிப்பட்ட மேன்மைக் குணம் அவனிடம் மருந்துக்குமில்லை. குற்றம் செய்தவனை மன்னித்து நல்வழிப்படுத்த வேண்டும் என்ற சுத்தசாத்விக குணம் அவனிடத்தில் எள்ளளவும் கிடையாது. குற்றம் செய்தவனை எப்பாடு பட்டாவது எவ்வித தந்திரம் செய்தாவது தண்டிக்க வேண்டும் என்ற ராஜஸ குணமே அவனிடம் எப்போதும் மேலாடி நிற்கிறது. ஆகையால், அவனை மகான் என்று கருதவே இடமில்லை. அவனுடைய விஷயத்தில் நாம் இரக்கம் கொள்வதற்கும் அவன் அருகமானவன் அன்று. பார்ப்பதற்கு அவன் பரம சாதுவைப் போல இருந்தாலும், அவனுடைய உடம்பில் மயிர்க்காலுக்கு மயிர்கால் விஷம் மறைந்து நிற்கிறது. ஒரு பாம்பு தேள் முதலிய விஷஜெந்துவைக் கண்டால், அவற்றினிடம் கொஞ்சமாவது தயை தாகூடிணியம் பாராமல் நாம் எப்படி நசுக்குகிறோமோ, அப்படியே நாம் அவன் விஷயத்திலும் நடந்து கொள்ள வேண்டும். ஆகையால், நீர் அவன் விஷயத்தில் கொஞ்சமாவது இரங்காமல் காரியத்தை நிறைவேற்ற வேண்டும். இப்படி எல்லாம் பலவகைப்பட்ட தந்திரங்களைச் செய்து அவஸ்தைப்பட்டுக் கொண்டிருப் பதை விட ஒரே ஒரு காலத்தில் எல்லாரையும் ஒழித்துவிடலாம் என்று நினைக்கிறேன். பல திட்டுகளுக்கு ஒரே முழுக்கா முழுகுவது போல எல்லோருடைய பகைமையையும் தீர்த்துக் கொள்ள அது ஒரே மருந்தாக இருக்கும். அப்படியே செய்வது உசிதமான காரியம் என்று நினைக்கிறேன்.